சித்த வைத்திய அகராதி 5601 - 5650 மூலிகைச் சரக்குகள்
சயுலாதிகச்செடி - கப்புச்சடைச்சிச்செடி
சரகண்டபாஷாணம் - இந்திரபாஷாணம்
சரகமாதவமரம் - முட்கிளுவைமரம்
சரக்கொன்றைமரம் - திருக்கொன்றைமரம்
சரசகாரிமரம் - வண்டுகொல்லிமரம்
சரசகாலினிமரம் - தேக்குமரம்
சரசமாகிகக்கொடி - வஞ்சிகொடி
சரச்சிகாச்செடி - குறிஞ்சாச்செடி
சாச்கிராச்செடி - கிலுகிலுப்பைச்செடி
சரணமரம் - அரசமரம்
சரணாகசச்செடி - முக்குறட்டைச்செடி
சரத்திகத்தட்டை - நாணற்றட்டை
சரநாசிகமரம் - அனிச்சமரம்
சரவணத்தட்டை - நரைப்பூத்தட்டை
சரவணப்பாற்கொடி - கருங்குறிஞ்சாக்கொடி
சரவுலைத்துருத்தி - இரட்டைத்துருத்தி
சரவூகரக்கொடி - கருங்கொடி
சரளவேர் - சிவதைவேர்
சரளாகவேலி - கருங்கொடிவேலிச்செடி
சரளைத்தேவதாருமரம் - பொற்றேவதாருமரம்
சரளகோடாமரம் - கருஞ்சித்தகத்திமரம்
சராசனமரம் - அரசமரம்
சராடிகச்சொடி - கருஞ் சீந்திற்கொடி
சரித்திரைமரம் - புளியமரம்
சரித்துடைமூலி - புல்லருவி
சரிபமரம் - அசோகுமரம்
சரிபாகுகமரம் - வக்கணத்திமரம்
சரிபாசிவேர் - சிறுநன்னாரி
சரிபீடகச்செடி - வாய்க்காற் சடைச்சிச்செடி
சருகைமஞ்சள் - நிறக்குமஞ்சள்
சருகொட்டிச்செடி - செந்தொட்டிச்செடி
சருக்கரை - கரும்புச்சருக்கரை
சருக்கரைக்குமிட்டி - தற்பூசுக்குமிட்டி
சருக்கரைக்குலிகம் - வாய்விளங்கம்
சருக்கரைக்கொழுமிச்சை - இனிப்புக்கொழுமிச்சைமரம்
சருக்கரைப்பாணிதம் - சருக்கரைப்பாகு
சருக்கரைப்புளியமரம் - இனிப்புப்புளியமரம்
சருக்கரைப்பூகியம் - விருசம்பழம்
சருக்கரைப்பூசிணி - இனிப்புப்பூசணிக்கொடி
சருக்கரைப்போளம் - வாளேந்திரபோளம்
சருக்கரையெலுமிச்சைமரம் - இனிப்பெலுமிச்சைமரம்
சருக்கரைவருணித் தட்டை - பேக்கரும்புத்தட்டை
சருக்கரைவள்ளிக்கிழங்கு - பால்வள்ளிக்கிழங்கு
சருக்கரைவாலிகப்பழம் - விளாம்பழம்
சருக்கரைவேம்பு - இனிப்புவேம்புமரம்
சருசாபிகச்செடி - கடுகுச்செடி
சருப்பராசித்தட்டை - நாணற்றட்டை
சருப்பராசிமாத்திரை - சகலநோய் தீர்க்குமருந்து
சருப்பராசியச்செடி - பீச்சுவிளாத்தி
சருமகாமரமம் - வெண்கொழுமிச்சைமரம்
சித்த வைத்திய அகராதி 5601 - 5650 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

