361. தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி
யானே
விளக்கவுரை :
5. பிரளயம்
362. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே
விளக்கவுரை :
[ads-post]
363. அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே
விளக்கவுரை :
364. தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென்
றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந்
தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.
விளக்கவுரை :
365. சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே
விளக்கவுரை :