அகத்தியர் பன்னிருகாண்டம் 1 - 5 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 1 - 5 of 12000  பாடல்கள்

agathiyar-panniru-kandam



காப்பு

1. ஆதியென்ற கணேசருட பாதம்போற்றி
    அப்பனே மனோன்மணியாள் கமலம்போற்றி
சோதியெனுஞ் சுடரொளியே சொரூபாபோற்றி
    சொற்கபதி நான்முகன்றன் பாதம்போற்றி
விதியெனும் வயித்தியர்கள் பிழைக்கவென்று
    வகுத்திட்டேன்பன்னிரெண்டு காண்டந்தன்னை
நீதியுடன் ஆயிரத்துக்கொரு காண்டந்தான்
    நிகழ்த்தினேன் மாணாக்கள் பிழைக்கத்தானே.

விளக்கவுரை :

2. தானான புலத்தியனே சாற்றக்கேளும்
    தகைமையுள்ள குருநூலாம் பெருநூலாகும்
பானான பராபரியை மனதிலெண்ணி
    பாடினேன் பன்னிரெண்டு காண்டமப்பா
தேனான காண்டமது வொன்றுக்கேதான்
    செப்பினேன் காவிய மாயிரந்தானாகும்
மானான வசுவனியை வணங்கியானும்
    மகிழ்ச்சியடன் பாடிவைத்த காண்டமாமே.

விளக்கவுரை :

3. காண்டமாம் பன்னீராயிரந் தானாகும்
    காசினி லிதைப்போலொரு நூலுண்டோ
தூண்டியதோர் காவியமாம் பன்னீராயிரம்
    துறையோடு முறையோடு செப்பினோம்யாம்
மீண்டதொரு யின்னூலை திரட்டியேதான்
    மேதினியில் குகைக்குள்ளே வைத்தேன்யானும்
ஆண்டகையாம் அசுவனியாந் தேவர்யானும்
    அடியேனுக் கோராணை செப்பினாரே.

விளக்கவுரை :

4. செப்பியதோ ராணையென்றால் சொல்லக்கேளும்
    செகமதிலே பாவிகளும் கர்மியுண்டு
ஒப்பியதோர் நூலதனைக் கொடுத்தாலப்பா
    என்மகனே லோகமெல்லாஞ் சித்தாய்ப்போகும்
தப்பியே தலைதெறித்துப் போகுமென்று
    சாற்றினா ரெந்தனுக்குச் சாபமப்பா
இப்புவியி லின்நூலைக் கொடாதேயென்று
    யெழிலுடனே வாக்குரைத்தார் தேவர்காணே.

விளக்கவுரை :

5. காணவே அடியேனுந் தாள்வணங்கி
    கருத்துடனே நாதாக்கள் சொற்படிக்கு
வேணவே அடியேனும் மனதுவந்து
    விருப்பமுடன் அசுவினியை மிகவும்வேண்டி
தோணவே சாபமதை நிவர்த்திசெய்ய
    தொன்மையுடன் அடியேனுந் தாள்பணிந்து
ஊணவேயவர் பாதங்கரத்தால் வேண்டி
    உத்தமனே பலகாலும் வந்தித்தேனே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar