அகத்தியர் பன்னிருகாண்டம் 221 - 225 of 12000 பாடல்கள்
221. தானான புலஸ்தியரே சொல்லக்கேளும்
தகைமையுள்ள பதினெண்பேர் சித்தர்தாமும்
கோனான சித்துமுனி கூட்டத்தோடு
கொற்றேவ யென்முன்னே வாதுபேச
தேனான வவரவர்கள் செய்த நூலை
திரட்டியே யான்செய்த நூலுக்காக
பானான காவியம் பன்னீராயிரத்தை
பாரினிலே செய்ததொரு கற்பம்பாரே.
விளக்கவுரை :
222. பாரேதான் மடைக்கூட்டம் ரிடிகளோடு
பாலகன வென்முன்னே யெதிர்த்துவந்து
நேரேதான் நானிருக்குஞ் சமாதிமுன்னே
நேரான கல்லாலின் மரத்தின்கீழே
கூரேதான் கூட்டமிட்டு வாயிரம்பேர்
குடித்தனமாம் பதினெண்பேர் வர்க்கத்தோர்கள்
சீரேதான் நூல்தனையே பெயத்துக்காட்டி
சிறப்புடனே வாதுமுகங் கூறினாரே.
விளக்கவுரை :
223. கூறினார் அகஸ்தியனார் முன்னதாக
குறிப்பான சாத்திரத்தின் தொகுப்பையெல்லாம்
மீறியதோர் கருமான முட்கருவையெல்லாம்
மிக்கான மாணாக்க னறியவென்று
தூறியே மறைபொருளை வெளிதாக்கிய
துப்புரவாய் செய்ததொரு தன்மையாலே
கோறியே நாங்களெல்லாங் கூட்டமிட்டு
குருமுனியே நாங்களெல்லாம் வந்தோம்பாரே.
விளக்கவுரை :
224. வந்தோமே யென்றுசொல்ல சித்தர்தாமும்
வளமையுள்ள கல்லாலின் மரத்தின்கீழே
அந்தமுடன் புஷ்கரணி தீர்த்தமுன்னே
அகஸ்தியரும் யெல்லவர்க்கும் வரவுசொல்லி
சொந்தமுடன் வாதுமிகப் பேசிவெல்ல
சுந்தரரைத் தானழைத்து வதிதம்பூண்டு
இந்ததொரு கல்லாலின் மரத்தின்கீழே
இன்பமுடன் பேசியல்லோ கெலிப்போம்தாமே.
விளக்கவுரை
225. கெலிக்கவே அகஸ்தியரும் வாதுபேசி
கெடியான நூலெல்லாங் கேட்கும்போது
சொலிக்கவே ரோமரிடி யாரெழுத்து
சொரூபமென்னும் அகஸ்தியர்முன் னெதிரதாக
கலிப்பான பரிபாஷை யானுஞ்செய்தேன்
கருவான பரிபாஷைத் தாமுஞ்செய்தீர்
வலிப்பான வழலையென்ற வண்டந்தன்னை
வாகுடனே மாறாட்டம் மிகச்சொன்னீரோ.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 221 - 225 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar