அகத்தியர் பன்னிருகாண்டம் 406 - 410 of 12000 பாடல்கள்
406. சொல்லவே டில்லிக்குக் குடபாகத்தில்
சொற்பெரிய தேவதாஸ் தலமொன்றுண்டு
புல்லவே தடாகமென்ற பொய்கையுண்டு
புகழான மஞ்சள் தாமரையுமுண்டு
மல்லான மனவரஞ் சிதமுமுண்டு
மகத்தான தேவதா புட்பமுண்டு
கல்லான கடகமது பொய்கைதன்னில்
கண்டவர்க ளாயிருந்தான் யில்லைதானே.
விளக்கவுரை :
407. இல்லையே தேவதாஸ் தலத்திலப்பா
எழிலான புலஸ்தியனே சொல்வேன்பாரு
கல்லையே கணியாக்கி கவுண்டுசெய்து
கடிதான வாலயமாம் நடுமையத்தில்
வில்லைப்போல் நாணியது பூட்டியேதான்
வீரான சூத்திரமாந் தானமைத்து
எல்லைக்குக் காவலாய் மதியம்பூண்டு
எழிலாகத் தான்சமைந்து யிருக்கும்பாரே.
விளக்கவுரை :
408. பாரப்பா சித்தருள்ள தேவஸ்தானம்
பளிங்கான குண்டுக்கல் பாணமுண்டு
மேரப்பா நடுமையந் தன்னிலப்பா
மேலான சித்தருட கைமறைப்பு
ஆரப்பா யறிவார்க ளிந்தப்போக்கு
அப்பனே சத்துரு சங்காரப்போக்கு
சேரப்பா ராஜாதி ராஜர்தம்மை
செயிக்கின்ற குண்டுக்கல் பாணமாமே.
விளக்கவுரை :
409. பாணமாங் கோட்டைக்குள் ளிருக்குங்குண்டு
பாங்கான தேவதாஸ் தலத்தின்குண்டு
மாணவே வையகத்து மாண்பர்தாமும்
மகத்தான தேவதாஸ் தலத்தின்நேர்மை
காணவே வந்தவரைக் கொல்லுங்குண்டு
கருவான சித்தரென்றா லழைக்குங்குண்டு
தோணவே சித்தாதி முனிவர்தாமும்
தோற்றமுடன் தானிருக்குங் கோயிலாமே.
விளக்கவுரை :
410. கோயிலாம் தேவதாஸ் தலமுமாகும்
குறிப்பான கோட்டையது சொல்லொண்ணாது
வாயிலாம் ராஜாஜி ராஜர்மெச்சும்
வகுப்பான கோயிலுள்ளே சித்தர்கூட்டம்
பேயான ராட்சத பூதம்யாவும்
பேரான கோட்டைக்குக் காவலுண்டு
தாயான மனோன்மணியாள் வீற்றிருக்கும்
தகைமையுள்ள கோட்டையென்று செப்பலாமே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 406 - 410 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar