அகத்தியர் பன்னிருகாண்டம் 186 - 190 of 12000 பாடல்கள்
186. பண்பான நாதாந்த வழலையப்பா
பாங்கான சித்தர்முனி செய்யும்வேதை
நண்பான நாதாக்கள் செய்யுமார்க்கம்
நாட்டினிலே யுந்தனுக்காய்ச் சொன்னேன்யானும்
திண்டான வழலைதனை யெடுத்துக்கொண்டு
தேற்றமுடன் மண்பாண்டந் தன்னிற்கொட்டி
கண்டான பனிசலத்தை அதிலேகொட்டி
கரைத்துநன்றாய்த் தெளிவிருக்க வளமைகேளே.
விளக்கவுரை :
187. கேளப்பா தெளிவிருத்து மறுபாண்டத்தில்
கெட்டியாய் யுவருப்பு பூர்க்குமட்டும்
தாளப்பா காச்சியெடு கம்பியுப்பு
தண்மையுடன் கசடதுவும் நீங்கியேதான்
வேளப்பா வுப்பதுவுந் தவளமாகும்
வேனமென்ற காரமது மிகவேகயூறும்
தூளப்பா வுப்பதனை சுரண்டியேதான்
துப்புரவாய் மறுபாண்டந் தன்னீற்போடே.
விளக்கவுரை :
188. போடையிலே பின்னுமே பனினீர்வாரு
புகழுடனே தான்கலக்கி மறுபாண்டத்தில்
நீடவே சீலையது வேடுகட்டி
நீதியுடன் மேற்பாண்டந் தன்னைமூடி
கூடவே தாமெரிப்பாய் சாமமட்டும்
கொப்பெனவே தீயாறி சுண்டியேதான்
தேடவே தீயாறிப் பார்க்கும்போது
தெளிவான வெண்மைநிற வுப்புமாச்சே.
விளக்கவுரை :
189. ஆச்சப்பா உப்பதனை இந்தபாகம்
அப்பனே முப்பத்திரண்டு பாகமாக
காச்சப்பா கைமுறையாய் செய்வீரானால்
பாலகனே யுப்பதுவுங் கெட்டியாகும்
காச்சலென்ற வுப்பதுவும் அரக்குபோலாம்
கரிதனிலே உருக்கையிலே கண்விட்டாடும்
நீச்சடங்கி வுப்பதுவுந் தவளம்போலாம்
நெடிதான வுப்பதனை பதனம்பண்ணே.
விளக்கவுரை :
190. பண்ணவே முன்சொன்ன முப்புமார்க்கம்
பதிவான யிடந்தனிலே யளவுசொல்வேன்
திண்ணமுட னோராளின் மத்திபத்தில்
திறமுடனே மண்தோண்டிப் பார்க்கும்போது
சுண்ணமென்ற அண்டக்கல் நடுப்பிண்டந்தான்
சுத்தமுடன் தானிருக்கு மதையெடுத்து
வண்ணமுடன் .....................பாக்குவகை சொல்வேன்கெளு
வளமையுடன் முன்சொன்ன பூநீரைவாங்கே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 186 - 190 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar