அகத்தியர் பன்னிருகாண்டம் 51 - 55 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 51 - 55 of 12000 பாடல்கள்





51. பிழைக்கவே கும்பமுனி சொன்னவாக்கு
    பேருலகி லென்னாளுங் கீர்த்தியாகும்
மழைபோன்ற சோனைநீர் தன்னைப்போலும்
    மாசற்ற ஞான சாகரமுமாகும்
தழைபோல படர்ந்திருக்கும் நூல்கட்கெல்லாம்
    தாயான நூலிதுதான் குருநூலாகும்
மழைமதக் களிறதைப்போல் இதுவென்பார்கள்
    மானிலத்தில் மாந்தரெல்லாந் துதிப்பார்தாமே.

விளக்கவுரை :


52. துதிப்பாரே யின்னூலைக் கண்டபேர்கள்
    துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
மதிப்பார்க ளின்னூலிற் சொன்னமார்க்கம்
    மானிலத்தில் ராசாதி ராஜரெல்லாம்
கதிப்புடனே முறையனைத்துங் கண்டுதேர்ந்து
    காசினியில் செய்துமல்லோ அதிதங்காண்பார்
கொதிப் பகற்றும் காயாதி கற்பந்தன்னை
    குறையாமல் முறையோடு காண்பார்பாரே.

விளக்கவுரை :


53. ......................................................
    ......................................................
................................................................
    ...................முறையுஞ் சொன்னேன்.
கூரேதான் மருந்துவகை யறியவென்றால்
    கொட்டினேன் சதகோடி வழலைமார்க்கம்
சீரேதான் செந்தூரப் பயன் அனைத்தும்
    சிறப்புடனே திரட்டிவைத்த துண்மையாமே.

விளக்கவுரை :


54. உண்மையாம் காயாதி கற்பமுண்டோர்
    உலகத்தில் மெத்தவுண்டு கேட்கப்போமோ
தண்மையுடன் வாசியோகந் தனிலிருந்து
    சாகரத்......................யிட்டொழித்த தன்மைபோலும்
நன்மைபெற வாசியைத்தான் மேலேநோக்கி
    நலமாகக் கும்பகத்தை கீழமர்த்தி
வெண்மையுடன் சமாதியினிலிருந்து கொண்டு
    வேகமுடன் வாசியைத்தான் பூட்டிக்கொள்ளே.

விளக்கவுரை :


55. பூட்டவென்றால் சின்மயத்தின் வாசல்தன்னை
    சிறப்புடனே தான்திறந்து பார்க்கும்போது
நீட்டமுடன் பதினாறு கோணந்தன்னில்
    நின்றுவிளை யாடுகின்ற பஞ்சகர்த்தாள்
கூட்டமுடன் நவகோணந் தனிலிருந்து
    கும்பகத்தின் மேலிருந்து வாசிபூட்டு
வாட்டமுடன் பஞ்சகர்த்தாள் ஆடுங்கூத்த
    வளமையுடன் அறுபதுவாங் கோணமாச்சே.
                       
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar