அகத்தியர் பன்னிருகாண்டம் 81 - 85 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 81 - 85 of 12000 பாடல்கள்



81.போடவே பனிநீரை யூத்திமைந்தா
    பொங்கமுடன் றானெரிப்பாய் புலஸ்தியாகேள்
நீடவே சுண்ணாம்பு போலேநிற்கும்
    நிலையான பூனீறு யென்னசொல்வேன்
கூடவே தான்கலக்கி தெளிவித்துக்
    கொற்றவனே மறுபடியுங் காச்சும்போது
மாடவே பூனீறு காரமேறி
    மாசற்ற பற்பமது சொல்லொண்ணாதே.
 
விளக்கவுரை :


82. ஒண்ணாது பற்பமது யெடுத்துக்கொண்டு
    உத்தமனே பரும்பீங்கான் றன்னில்வைக்க
நண்ணமுடன் மண்டலஞ்சென் றெடுத்துப்பாரு
    நலமான முப்பூவு மென்னசொல்வேன்
சுண்ணமுடன் பற்பத்தைப் பதனம்பண்ணு
    காட்டதே காமிகட்கும் பாவிகட்கும்
திண்ணமுடன் எப்போதும் பராபரியைத்தான்
    திருவடியைத் தான்வணங்கி செபத்தில்நில்லே.

விளக்கவுரை :


83. நிற்கையிலே வாணிவந்து நிர்த்தஞ்செய்வாள்
    நீணிலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
துற்கைமுதல் டாகினியு மிதற்கீடுண்டோ
    துரைராஜ பாலகனே புருஷயோகி
அற்பமென்று நினையாதே இந்தவுப்பு
    அவனியிலே யாருந்தான் சொல்லார்பாரு
விற்பனமாய்ச் செய்துகொள்வன் யோகியாவான்
    வேதாந்தத் தாயினது கிருபைபோற்றே.

விளக்கவுரை :


84. .....................மொரு கருமானங்கேள்
    பொங்கமுடன் புலஸ்.......................
மாற்றமுடன் சத்தியுப்பு சொல்வேன்பாரு
    ..... ... ..... ..... ......னார்தான் பண்டார்
சீற்றமுள்ள யுப்பதுவே யார்
    ..... ...... .....யாகி காண்பதல்லால் மற்றோர்காணார்
கூற்றனெ.... ..... .......ன் தான் சொன்னார்
    குனிப்படவே யாமுனக்குச்..........................
    
விளக்கவுரை :


85. ..........................................................
    ...............................................................
............................................................
    ..............................................................
....................................................................................
    ..... .....வழலைக்குக் காரமெத்த
கூரேதான் சிவமுப்பு சொல்லிவிட்டேன்
    கொற்றவனே சத்திமுப்பு யின்னங்கேளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar