அகத்தியர் பன்னிருகாண்டம் 86 - 90 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 86 - 90 of 12000 பாடல்கள்



86. இன்னமுமே யாமுறைப்போம் யெளியவானே
    யென்மகனே யுந்தனுக்காய்க் கூறிவிட்டேன்
சொன்னபடி தப்பாது குருவாக்கப்பா
    சொற்பமென்று நினையாதே துரைமன்னாகேள்
வின்னமது நேராது சத்திமுப்பு
    விபரமுடன் சொல்லுகிறோம் வினையாய்க்கேளு
துன்னியமாய் முதற்பிண்டந் தலச்சனாக
    தகைமையுள்ள கல்லுரலில் போட்டுச்சாடே. 

விளக்கவுரை :


87. சாடவே கல்லுரலில் போட்டுமேதான்
    சாங்கமுடன் சுத்தசலம் விட்டுமைந்தா
நீலவே யுவர்ப்பூவும் கூடப்போட்டு
    நீண்மையுடன் றானிடித்து மைபோலாக்கி
கூடவே பாண்டமதிற் சுத்தசலம் விட்டுக்
    துப்புறவாய் யடுப்போற்றிக் கொதிக்கக்காய்ச்சு
போடவே யெண்ணையது கக்கிப் போகும்
    பொங்கமுடன் றானிருக்கு மெடுத்துக்கொள்ளே.

விளக்கவுரை :


88. கொள்ளவே முப்பூவை யெடுத்துக் கொண்டு
    குணமான குடுக்கைதனி லடைப்பாய்மைந்தா
விள்ளவே சிலகாலஞ் சென்றபின்பு
    விருப்பமுடன் முப்பூவை யெடுத்துப்பாரு
துள்ளவே முப்பவுந் தவளம்போலாம்
    துப்புறவாய் மலர்ந்துமல்லோ பூத்திருக்கும்
எள்ளளவும் பிசகதுதான் வாராதப்பா
    யெழிலான சத்தியென்னும் முப்புதானே.

விளக்கவுரை :


89. முப்பான முப்பதுவுஞ் சொல்லப்போமோ
    மூவுலகந் தான்மதிக்குஞ் சொர்ணமுப்பு
அப்பான முப்பதுவும் முதற்றரந்தான்
    அப்பனே துறையான முப்புமாச்சு
செப்பார்கள் சித்தர்முனி ரிடிகள்யாவும்
    சிறப்புடனே யுன்தமக்காய்ச் சொன்னேன்யானும்
துப்புரவாய் சிவராஜ ஞானிபோல
    துன்ப சாகரத்தைவிட்டுத் துலைவாய்நில்லே.

விளக்கவுரை :


90. நிற்கையிலே யின்னமொரு கருமானங்கேள்
    நேரான புலஸ்தியனே செப்பக்கேளும்
சொற்பமா மின்னமொரு முப்புசொல்வேன்
    சொர்ணமென்ற சிற்றண்டங் கொண்டுவந்து
அற்பமா யெண்ணாதே சவ்வுபோக்கி
    வப்பனே சவுக்கார காரத்தாலே
கற்பமுடன் செயநீரைப் பாண்டமிட்டு
    கருத்துடனே வோடதனைக் கொதிக்கவையே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar