அகத்தியர் பன்னிருகாண்டம் 106 - 110 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 106 - 110 of 12000 பாடல்கள்



106. ஆனாரே நூல்களிலே தர்க்கம்பேசி
    அவனிலே வீணாகக் கெட்டலைந்தார்
போனாரே புதுநூல்கள் பழைய நூலும்
    பொங்கமுடன் வெகுசொச்சம் லெக்கோாயில்லை
நானான படியாலே சொச்சம்சொல்லி
    நாட்டினில் பிழைக்கவென்று மனதிறங்கி
தேனான மறைகளெல்லாம் தெரியவென்று
    தெளியவென்று செகதலத்தில் செப்பினேனே.

விளக்கவுரை :


107. செப்பினேன் தசலட்சம் காப்புதன்னை
    தெளிவாகப் புலஸ்தியனே சொல்லக்கேளீர்
ஓப்பமுடன் பத்துலட்சம் காப்புசெய்தேன்
    ஓகோகோ நாதாக்கள் செய்ததில்லை
நெப்பமுடன் பத்துலட்சக் கிரந்தந்தன்னை
    நேர்மையுடன் பாடிவைத்தேன் கோடிமார்க்கம்
சொற்பமென்று நினையாதே துரைமன்னாகேள்
    துறையோடு முறையோடுஞ் சொன்னேன்பாரே.

விளக்கவுரை :


108. பாரேதான் தசலட்ச கிரந்தந்தன்னை
    பாடிவைத்த ஔவையார் கண்டாரப்பா
சீரேதான் சித்தர்முனி ரிடிகள்தாமும்
    சிறப்புடனே யவரவர்கள் மனதுபோல
வேரேதான் சாத்திரங் களுண்டுபண்ணி
    வெகுமறைப்பு சூதுகளுஞ் செய்துபோட்டார்
நீரேதான் புலஸ்தியனே பிழைக்கவென்று
    நீணிலத்தில் பெருநூல்தான் செய்தேன்பாரே.

விளக்கவுரை :


109. செய்யவென்று யென்மனதி லெண்ணங்கொண்டு
    சேனை நாள் காத்திருந்தேன் வரைகோடிகாலம்
பய்யவே சித்தரெல்லாங் கூட்டங்கூடிப்
    பட்சமுட னெந்தனிடம் வந்தார்கண்டீர்
துய்யதொரு கடினமுள்ள சித்ததாமும்
    துரைராஜ சந்தரனே வாதுசொன்னார்
மெய்யான பெருநூல்தான் செய்தீரானால்
    மேதினி யெல்லாஞ் சித்தாய்ப் போமென்றாரே.

விளக்கவுரை :


110. போமென்று சொல்லுகையில் சித்தர்தாமும்
    பொங்கமுடன் .............. .......................................
.....................  ........................... ..........................
    ................ .............................. .....................................
.........குருக்களுமார் சீஷமார்கள்
    குவலயத்தில் மெத்தவுண்டு கூறக்கேளீர்
நாமொன்று சொன்னாலோ அவரொன்று செய்வார்
    நாதாக்கள் மறைப்பெல்லாம் வீணாய்ப்போமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar