அகத்தியர் பன்னிருகாண்டம் 111 - 115 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 111 - 115 of 12000 பாடல்கள்



111. போமென்று விடுகாதே புலஸ்தியாகேள்
    புகழுடனே பெருநூல்யான் செய்வேனென்றேன்
தாமேதா னவரவர்கள் செய்தநூற்கள்
    தாரணியில் மெத்தவுண்டு யிதுபோல்சொல்வார்
வேமேதான் சூட்சாதி சூட்சம்யாவும்
    வெகுவிதமாய்ச் சொல்லிவைத்தேன் பெருநூல்தன்னில்
நாமேதான் சொன்னபடி பெருநூல்தன்னில்
    நாட்டிலே யாரேனுஞ் சொல்லார்தானே.

விளக்கவுரை :


112. சொல்லாத கருவா நூலுக்கெல்லாம்
    தோற்றமுட னின்னூல்தான் குருநூலாகும்
வெல்லவே சித்தர் முனி ரிடிகள் தாமும்
    வேதாந்தத் தாயினது கடா ட்சத்தாலே
புல்லவே போகரது பெருநூல் சாகரந்தான்
    பேரான னூற்கெல்லாம் பெருனூலாகும்
அல்லவே சாத்திரத்தைப் பாடினாலும்
    அவனியிலே கருவாளி காண்பான்பாரே.

விளக்கவுரை :


113. காண்பானே சாத்திரத்தை மதியூகிதானுங்
    கருவான கருவிகர ணாதியெல்லாம்
ஆண்மையுள்ள சிங்கந்தா னறிவானப்பா
    அப்பனே வீண்பிள்ளை அறிவானோசொல்
மாண்பான மாநிலத்தில் மெத்தகோடி
    மன்னர்கள் குருக்கள்மார் மாந்தர்யாவும்
தாண்பான சாத்திரத்தை யுகந்துப்பார்த்து
    தகைமையுள்ள சாத்திரத்தை தோடிப்பாரே.

விளக்கவுரை :


114. தோடித்தா ரானாலே பாவமெய்தும்
    தொல்லுலகில் தெரியாம லவலமென்பார்
தூடித்த பாவிகட்கும் கருமிகட்கும்
    தூருடனே இடிபோலே சாபம்நேரும்
பாடியங்கள் தெரியாமல் பலவாறாக
    பாரினிலே துடிப்பார் பலனூல்தன்னை
பூடிதமாய் யென்னூலைப் புகழ்ந்தோர்தாமும்
    பூதலத்தில் சித்தனைப்போல் வாழ்வார்தானே.

விளக்கவுரை:


115. வாழவே புலஸ்தியனே சொல்லக்கேளீர்
    வாகுடனே திரேதாயி னுகத்திலப்பா
நீழவே வரரிடியாம் சித்துதாமும்
    நீடாழி காலம்வரை யுலகிருந்தார்
ஆழவே வெகுகோடி சாத்திரங்கள்
    அப்பனே பாடியல்லோ சாகரத்தில்
சாழவே சமுத்திரத்தி லுருவிவிட்டார்
    சார்பான னூல்களெல்லாம் மிதந்துதாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar