அகத்தியர் பன்னிருகாண்டம் 261 - 265 of 12000 பாடல்கள்
261. முன்னின்ற வகஸ்தியரை வேலர்பார்த்து
மோனமென்ற ஞானவுப தேசந்தன்னை
தன்மனையில் தேடிவந்த அகஸ்தியர்க்குத்
தாஷ்டிகமாய் தானுரைப்பார் வேலர்தாமும்
கன்மவினை முன்னகற்றி கர்த்தாதானும்
கைலகிரி நாதரைத் தொழுதுபோற்றி
தன்மனது யெந்நாளும் பூணவேதான்
சட்டமுடன் வாக்கதுவு மளித்தார்தாமே.
விளக்கவுரை :
262. தாமான வடிவேலர் முருகன்றானும்
சாற்றலுற்றா ரகஸ்தியர்க்கு மின்னஞ்சொல்வேன்
நாமான யிதிகாச புராணமெல்லாம்
நலமுடனே கற்றறிந்த வகஸ்தியர்க்கு
கோமான்போல் தென்பொதிகை வீற்றிருந்த
குருபரனாம் அகஸ்தியனார் முனிவருக்கு
பூமாது மனோன்மணியாள் கடாட்சத்தாலே
புகழுடனே உபதேசஞ் சொன்னார்பாரே.
விளக்கவுரை :
263. பரேதான் நாலுயுக அதிசயங்கள்
பாலகனே எந்தனுக்குச் சொன்னாரப்பா
நேரேதான் துவாபர யுகத்தில்தானும்
நேரான யெந்தனுக்குச் சமைந்தசாபம்
கூராகத் தீர்த்தத்தின் கரையினோரம்
குறிப்பான சடாயுவென்ற பட்சிதன்னால்
வீரமுடன் நேரிட்ட சாபந்தன்னை
விருப்பமுட னெந்தனுக்கு தீர்த்தார்காணே.
விளக்கவுரை :
264. காணவே சடாயுவின்றன் சாபந்தன்னை
காசினியில் தீர்த்ததோரு கதைகள்தன்னை
பூணவே கலியுகத்தில் சித்துதாமும்
புகழாய்ச் சாத்திரத்தில் சொல்லவில்லை
வேணவே யான்றானும் யிந்தநூலில்
விபரமுடன் சொல்லிவிட்டே னுந்தனுக்காய்
வாணர்முதல் யின்னூலைக் கண்டிட்டாலும்
வளமான சாபமதை யறியார்தாமே.
விளக்கவுரை :
265. அறியாதே யிந்நூலில் தோஷஞ்சொல்லி
வப்பனே யநேகம்பேர் வரமும்பெற்றார்
குறிபோலே வடிவேலர் உபதேசத்தைக்
கொற்றவனே புலஸ்தியனே அடியேன்றானும்
முறிபடவே ஞானோப தேசந்தன்னை
முதன்மையாய் எந்தனுக்கு உபதேசித்தார்
நெறியுடனே யானுமுப தேசம்பெற்று
நேர்மையுடன் வெகுகால மிருந்தேன்தாமே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 261 - 265 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar