அகத்தியர் பன்னிருகாண்டம் 121 - 125 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம்121 - 125 of 12000 பாடல்கள்



121. தாமான புலஸ்தியனே சாற்றக்கேளீர்
    தகைமையுள்ள தீவினைக்கு ஆளாகாமல்
நாமேதான் சொன்னதொரு கதையைப்போல
    நாட்டினிலே வரரிடியின் சாபத்தாலே
போமேதான் பொல்லாத தீவினைக்கு
    பொங்கமுடன் சாபத்தை நிவர்த்திசெய்து
ஆமேதா னப்போது மவனிதன்னில்
    அப்பனே யிருப்பதற்கும் யிடமுந்தேடே.

விளக்கவுரை :


122. தேடையிலே குருவின்மேல் பட்சம்வைத்து
    தேற்றமுடன் குருநூலை மெற்யென்றெண்ணி
பாடையிலே போமளவுங் கைவிடாமல்
    பாரினிலே சதாகாலம் அர்ச்சித்தேதான்
கூடையிலே வனுபோக நியமந்தன்னை
    கொற்றவனே யெப்போதுங் கொண்டணைத்து
மேடையிலே வாதியிடம் நின்றுகொண்டு
    மேன்மையுடன் சதாகாலம் பூசிப்பாயே.
     
விளக்கவுரை :


123. பூசிக்கும் வேளையிலே பராபரியாள்வந்து
    புகழுடனே யுந்தனுக்கு வரமுமீய்வாள்
ஆசித்து யெந்தனையுஞ் சதாகாலந்தான்
    அப்பனே வரங்கேட்டு யிருந்துகொண்டு
நேசித்து சித்தர்முனி ரிடிகளோடு
    நேசமுடன் தாமிருந்து கேள்விகேட்டு
பாசமது தானகற்றிப் பூலோகத்தில்
    பதவிவழி பெறுவதற்கு ஆளாவீரே.

விளக்கவுரை :


124. ஆளாவீர் புலஸ்தியனே சொல்வேன்பாரீர்
    அப்பனே யென்னூலை தோஷம் நீக்கி
பாளதுதான் போகாமல் மனதிலுன்னி
    பட்சமுடன் தியானித்து பெருநூல்தன்னை
நாளே தான் சதாகாலத் தவசிருந்து
    நன்மைபெற காவியத்தை மனதிலுன்னி
வீளேதான் அசுவனியின் கடாட்சத்தாலே
    விருப்பமுட னென்னாளும் வாழ்வீர்தாமே.
    

விளக்கவுரை :


125. தானான புலஸ்தியனே யின்னங்கேளீர்
    சாற்றுகிறேன் பண்டிதாளி லக்கணத்தைக்
கோனான யெனதையர் சொற்பழக்கி
    கூறுவேன் மாணாக்கள் பிழைக்கவென்று
மானான பண்டிதற்கு விதிகள்சொல்வேன்   
    மகத்தான நன்னடத்தை யாவுந்தேர்ந்து
பானான முறைப்படியே நடந்துகொண்டு
    பாரினிலே நூல்கேட்க வேண்டும்பாரே.
   
   விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar