அகத்தியர் பன்னிருகாண்டம் 426 - 430 of 12000 பாடல்கள்
426. தள்ளிட்டேன் மாந்தரிட செனனமெல்லாந்
தாரணியில் யிப்படியே பொய்வாழ்வப்பா
உள்ளிட்ட சித்தர்முனி ரிடிகள்தாமும்
உகந்ததோர் தேவதா ரிடியைத்தானும்
சுள்ளிட்ட தேகமது மண்ணாய்ப்போகும்
சுந்தரனே வுலகமது பொய்வாழ்வாகும்
விள்ளவே யுலகமெல்லாம் பொய்யேயாகும்
வேதாந்த சித்தருட வாக்குதாமே.
விளக்கவுரை :
427. வாக்கான யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன்
மகத்தான தென்பொதிகை கிழக்கேயப்பா
நோக்கான வன்பது காதந்தானும்
நுணுக்கமுள்ள நகரமது வொன்றுகாணும்
தேக்கான நாடதுதான் சொல்லலாகும்
தேசத்தில் வினோதமுள்ள சித்துநாடு
தூக்கான சித்துமுனி ரிடிகள்தாமும்
துறையான கூட்டமது சேர்வார்பாரே.
விளக்கவுரை :
428. பாரேதான் காடதனில் மண்டபந்தான்
பாங்கான தென்பொதிகைச் சார்பிலுண்டு
நேரேதான் மண்டபமாங் கோட்டைமண்ணாம்
நெடுங்காலஞ் சென்றதொரு யீசர்கோட்டை
ஊரேதான் பூனீறு விளையும்நாடு
உத்தமனே நாதாக்க ளிருக்குந்தேசம்
வேரேதான் தேசமது யிதற்கீடுண்டோ
வேதாந்த சித்தர்முனி யிருக்கும்நாடே.
விளக்கவுரை :
429. நாடான கோட்டையது யீசர்கோட்டை
நலமான தோப்பெல்லாந் தேக்கேயாகும்
கோடான கோடிசித்து சமாதியுண்டு
கொற்றவர்கள் குவலயத்தில் மாண்டமாண்பர்
நீடான காயகற்பங் கொண்டமான்பர்
நிலையான சமாதியது கணக்கோயில்லை
தாடான தேகமது வழியாமற்றான்
தகைமையுடன் பூமிதனி லிருக்கும்பாரே.
விளக்கவுரை :
430. பாரேதான் கோட்டைக்குள் கதண்டுதானும்
பாங்கான மாந்தர்களைச் சேரவொட்டா
நேரேதான் சுரங்கமது நீணிலத்தில்
நேர்மையுடன் பதிங்காத வழிதான்செல்லும்
சேரேதான் சுரங்கமது நடுமையத்தில்
சிறப்பான வேதமுனி வியாசர்தாமும்
கூரேதான் சமாதியது யிருக்கும்பாரு
குவலயத்தி லதிதமிது யென்னலாமே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 426 - 430 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar