அகத்தியர் பன்னிருகாண்டம் 236 - 240 of 12000 பாடல்கள்
236. தானேதான் விளைந்ததொரு சுக்கான்கல்லு
தகைமையுள்ள கல்லதுவும் பிரமக்கல்லு
வேனேதான் குடுகுடுக்கல் சுக்கானாச்சு
வேகமுடன் தான்வேளர்ந்த மட்டிக்கல்லு
மானேதான் வூமையென்ற ரத்தினக்கல்
மகத்தான விஷபீசக் கல்லென்றும்பேர்
கோனேதான் குருசொன்ன கல்லுமாகும்
கொடிதானே ரோமமென்ற கல்லுமாமே.
விளக்கவுரை :
237. கல்லான கல்லதுவும் கோரைக்கல்லு
கருவான மட்டியென்ற கோரைக்கல்லு
புல்லான பாலைநிலம் தன்னில்மேவும்
புகழான கல்லதுவும் பொருமல்கல்லாம்
கொல்லான சிவந்தக்கல் நாமக்கல்லாம்
சுத்தமுள்ள சிவந்தநிறக் கல்லுமாகும்
வில்லான கல்லுமப்பா மேதினிக்குள்
மேன்மையுடன் தான்வளர்ந்த பிண்டமாமே.
விளக்கவுரை :
238. பிண்டமாம் கல்லென்ற நாமமாச்சு
பேறான பனியினால் விளைந்தக்கல்லாம்
அண்டமதில் விழுந்ததொரு கங்கையாலே
அதிற்பிறந்த கல்லாச்சு யென்றுசொன்னீர்
தண்டமென்னும் பிரிதிவினால் விளைந்தகல்லு
தன்மையுள்ள சூட்சமது மறைத்துப்போட்டீர்
கொண்டபடி மனக்குறைக ளதிகம்வைத்து
கோளாறு வாகவேதான் பாடீனீரே.
விளக்கவுரை :
239. பாடியே பரிபாஷை தியக்கமாகப்
பாருலகில் யாரேனுங் காண்பாருண்டோ
தேடியே கெட்டலைந்து சுட்டுமாண்டு
தேசத்தில் சமுசாரி மாண்டாரப்பா
வாடியே முகம்வாடி நிதியும்போய்
வண்மையுள்ள வுத்தியது மிகவுங்கெட்டு
கூடியே கும்பல்கும்ப லாகக்கூடி
குவலயத்தில் கெட்டார்கள் கோடியாமே.
விளக்கவுரை :
240. கோடிபேர் பரிபாஷைப் பார்த்துமல்லோ
குவலயத்தில் மாண்டார்கள் லக்கோயில்லை
நீடியே மறைத்துவைத்த வண்மையாலே
நிலையான பொருளென்று நிர்ணயித்து
நாடியே சித்திராப் பருவந்தன்னில்
நாட்டமுடன் பூவழலை யெடுப்பதற்கு
தேடியே காவனத்திற் சென்றுமல்லோ
தேசத்தில் வெகுபேர்கள் விழலானாரே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 236 - 240 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar