Showing posts with label உரோம ரிஷி சித்தர். Show all posts



உரோம ரிஷி சித்தர் ஞானம் 11 - 13 of 13 பாடல்கள்

11. காடேறி மலையேறி நதிக ளாடிக்
          காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
          சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
          சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
          அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்

விளக்கவுரை :

12. பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
          பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
          வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே.
ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே;
          உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே;
ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ
          டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப்         

விளக்கவுரை :

13. தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ்
          சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்;
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க
          மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும்        
போமென்று போனதனால் நாள்கு றைந்து
          போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை;
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று
          தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே?

விளக்கவுரை :

உரோம ரிஷி சித்தர் ஞானம் முற்றும்



உரோம ரிஷி சித்தர் ஞானம் 6 - 10 of 13 பாடல்கள்

6. அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே!
          ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்;
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான்
          பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு;
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால்
          உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை;
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு
          மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே.

விளக்கவுரை :

7. மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்
          வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று
          நலமான அட்டாங்க மப்பிய சித்துக்
காலென்னப் பிராணாய முன்னே செய்யில்
          கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று
          குறையாமற் சரபீங் கூட்டித் தீரே.

விளக்கவுரை :

8. கூட்டியே பழகினபின் சரபீ சத்தில்
          குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே
          கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு;
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே
          மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந்
          தணலான ருத்திரனுந் தணலு மாமே.

விளக்கவுரை :

9. கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு;
          காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான்
புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம்
          பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே?
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
          சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
          மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;

விளக்கவுரை :

10. சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
          சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
          பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
          முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
          வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?

விளக்கவுரை :
Powered by Blogger.