புலிப்பாணி ஜாலத்திரட்டு 66 - 70 of 211 பாடல்கள்

 புலிப்பாணி ஜாலத்திரட்டு 66 - 70 of 211 பாடல்கள்



இரும்பு குண்டு அந்தரத்தில் நிற்கும் ஜாலம்

66. தானேதான் நத்தைசூரி செடியைக் கண்டு
    தயவாக அருக்கநாள் சுவாதியுந் தான்
கானேதான் கும்பலக்கினம் கூடும் வேளை
    குணமான அச்செடிக்குக் காப்புக் கட்டி
மானேதான் மறுஆகி வாரந்தன்னிற்
    பானேதான் பலியிட்டுப் பூசை போட்டு
பண்பான வேரைத்தான் பதமாய் வாங்கே. 
          
விளக்கவுரை :

இரும்பு குண்டு அந்தரத்தில் நிற்கும் ஜாலம் செய்ய முதலில் நத்தைச் சூரி என்னும் செடியைக் கண்டுபிடித்து, ஆதிவாரம், சுவாதிநட்சத்திரம், கும்ப லக்கனம் கூடிய அவ்வேளையில் அந்தச் செடிக்கு காப்பு கட்டி விட்டுமறு  ஆதிவாரம், சிம்ம லக்கனம் அன்று சென்று பொங்கலிட்டு பலிட்டு, பூசை செய்து விட்டு எச்சரிக்கையுடன் செடியின் வோ்கள் அறுந்து விடாமல் பதமாக எடுத்து வரவும்.

67. வாங்கியே தங்கத்தாற் காப்புச் செய்து
    வளமான வேரதனில் வைத்து மூடி
சோங்கியே வினாயகரைப் பூசித்தே தான்
    சுந்தரம்போல்  வலதுகையில் சுகமாய் போட்டு
யோங்கியே இரும்பு குண்டை கையிலெடுத்து
    யெதிராக அந்தரத்தில் விட்டெறிந்து
நீங்கியே காப்புதன்டை இடது கையால்
    நிட்சயமாய் நிலங்காட்ட நிற்கும் தானே.

விளக்கவுரை :

தங்க தகட்டில் அந்த வேரை வைத்து சுருட்டி காப்பு செய்து அதனை விநாயகா் முன்வைத்து பூசித்து உங்களது வலது கையில் போட்டுக் கொள்ளவும். பின்னா் ஓரு இரும்புக் குண்டை கையிலெடுத்து ஆகாயத்தை நோக்கி மேலே எறிந்து விட்டு காப்பு அணிந்துள்ள வலது கையை இடது கையினால் பிடுத்துக் கொண்டு நிலத்தைக் காட்டியபடி குண்டே அந்தரத்தில் நில் என்றால் நிற்கும். உடனே கையை பிரித்து கையை முறிந்தால் அந்தரத்தில்நின்ற குண்டு கீழே வந்து விழும்.
                                     
ஜலஸ்தம்பனம்

68. தானாக இன்னமொரு வித்தை கேளு
    தயவாகச் சலந்திரட்டுங் கூட்டு மூலி
வானாக உலா்த்தியதைத் தூனாய்ச் செய்து
    வளவாக ஐங்கோலத் தயிலந் தன்னில்
மானாக மையோல வரைந்து மைந்தா
    மருவு பாதக்குறடு தன்னிற் பூசிக்
கோளாகத் தண்ணீற்மேல்  நடக்க லாகுங்
    களங்கிணறே யல்லாம் லாறா காதே.

விளக்கவுரை :

எளிமையான இன்னொரு ஜாலவித்தையைக் கூறுகிறேன் கேட்டாயாக. சலந்திரட்டும் மூலிகையைக் கொண்டு வந்து நன்றாக உலா்த்தி யெடுத்து தூளாகச் செய்து அதில் ஐங்கோலத் தைலம் சோ்த்து மைபோல அரைத்தெடுத்துக் கொள்ளவும். இதனை பாதத்தின் அடியில் பூசிக் கொண்டு தண்ணீரின் மேல் நடக்கலாம். குளம், கிணறு போன்றவைகளில் நடக்கலாம்.

69. ஆறான வாசனங்கள் தன்னிற் பூசி
    அப்பனே ஜலத்தின்மே லிருக்கலாகுங்
கூறான விந்தவித்தை புதுமை மெத்த
    கொற்றவனே யுலகத்தோர் நானனென்பார்
தேறான விந்திர ஜாலந் தன்னில்
    தேறி நின்றார் சகலத்தும் கைக்குள்ளாகும்
வீறான போகருடய கடாட்சத்தாலே
    விதமாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இந்த மையை பீடங்களின் கீழ்பபறம் பூசிக் கொண்டால் ஜலத்தின் மேல் உட்காரலாம். இந்த ஜாலத்தைப் பார்ப்பவா்கள் ஆச்சரியமடைந்து புகழ்வார்கள். இந்திர ஜாலத்தில் தோ்ச்சிபெற்றால் சகலசித்தும் கைகூடும். இதனை போகருடைய அருளினால் புலிபாணியாகிய நான் உரைத்துள்ளேன்.
                               
அழகிய பெண்ணாகும் ஜாலம்

70. தானான பச்சோந்தி பிச்சை வாங்கி
    தயவாகத் திசைமயக்குப் பொடியுங் கூட்டு
மானான மதிமயக்துத் தூளுங் கூட்டி
    மத்தம்வோ்த் தூள துவுங் கூடச் சோ்த்து
வானான வாக்கோலத் தாட்டி மைந்தா
    வளமாகச் சிமிழ்தனில் வைத்துக் கொண்டு
கோனான மோகினியை  தியானஞ் செய்து
    குணமான ஜாலக்காள் பூசை செய்யே.

விளக்கவுரை :
 
எட்சணி ஜாலவித்தை செய்திட முதலில் பச்சோந்தி ஒணானின் பிச்சை எடுத்து வந்து அதில் திசைமயக்கும் பொடியைச் சோ்த்து, மதிமயக்குத் தூளையும் கூட்டி, ஊமத்தம் வேரைத் தூளாக்கிக் அதில் சோ்த்து ஐங்கோலத் தைலம் விட்டு மைபோல அரைத்தெடுத்து சிமிழில் வைத்துக் கொண்டு மோகினியை நினைத்து தியானம் செய்து ஜால் காளுக்கு பூசை செய்யவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar