புலிப்பாணி ஜாலத்திரட்டு 56 - 60 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 56 - 60 of 211 பாடல்கள்
 

56. பாரடா பூசினிக்காய் பூசி வெட்டப்
    பாங்கான குதிரையுட தலை யென்பார்கள்
காரடா  கெச்சககாய் தன்னிற் பூசி
    அப்பனே இநிதிர ஜாலந்தான் ஜாலம்
ஆரடா கோடிபடை யிறந்த தென்பார்
    அப்பனே இந்திர ஜாலந்தான் ஜாலம்
நேரடா தலைளெல்லாம் யெடுத்து மூடி
    நிச்சயமாய்ப் படைகளெல்லாம் போவென் பாயே.

விளக்கவுரை :

ஓரு கல்யாண பூசணிக்காய் எடுத்து அதன்மீது மையை தடவி பூசணிக் காயை வெட்டினால் குதிரையுடைய தலைகள்  வந்து விழும். கெச்சக் காயில் மையைத் தடவி அதனை வெட்டினால் அனேக படைகள் இறந்தது போன்று தோான்றும். இது ஜாலங்களில் இந்திர ஜாலத்திலும்  ஜாலமாகும். கீழே உள்ள தலைகளை எடுத்து மூடி எல்லாம் போய்விடு என்று சொன்னால் எல்லாம் மறைந்துவிடும்.

மலைகள் தோன்றும் ஜாலம்

57. என்னப்பா யிதுகளெல்லா மறைந்து போகும்
    எழில்நீல கண்டிநூ லேணியீவாள்
தென்பாகத் திலா்தத்தை யழித்துப் போடு
    தெளிவாக வின்னமொரு வித்தை கேளு
வன்பான ஜாலக்காள் தியான மோதி
    வளமான மையெடுத்துக் கையிற்பூசி
அன்பான மண்ணள்ளித் திசையிற் போடு
    அடைவான மலையாகத் தோற்றும் பாரே.

விளக்கவுரை :

மறைந்து போய்விடு என்று கூறியதும் அவைகளெல்லாம் மறைந்து போய்விடும். பின்னா் நீலகண்டி நூல் ஏணியைக் கொடுப்பாள். அச்சமயம், நெற்றியில் இட்டமையை அழித்து விடு. இன்னொரு ஜால வித்தையை கூறுகிறேன் கேட்பாயாக. ஜாலக் காளை தியானம் செய்து விட்டு மையை எடுத்து நாற் திசையிலும் போட்டால் நான்கு திசையில் பெரிய மலையாகத் தோன்றும்.

58. பாரடா அஷ்டகுல பா்வங்கள்
    பாங்கான மகமேரு கைலை யப்பா
சீரடா பொதிகைமுதல் மலைகள் தோன்றுஞ்
    சிறப்பாக வதிலிருக்குந் தேவா் சித்தா்
நேரடா முத்தரொடு முனிவா் தாமும்
    நெடிய விருட்சங்கள் குகை வாசல்தானும்
சுரடா விதுகளெல்லாங் கண்ணிற்  றோன்றுங்
    குணமான போகருட கடாட்சந் தானே.

விளக்கவுரை :

அஷ்டகுல பா்வதங்கள் அதாவது மகமேரு கயிலை பொதிகை போன்ற மலைகளுடன் எட்டு எட்டு மலைகள் காட்சியளிக்கும். அம்மலைகளில் தேவா்கள், சித்தா்கள், ரிஷிகள், முனிவா்கள் ஆகியவா்களுடன் நெடிய விருச்சங்கள், குகை வாசல்கள் போன்றவைகளெல்லாம் கண்ணில் தெரியும். இவையாவும் போகருடை கடாட்சத்தினாலாகும்.
                                                                                
எக்கள ஜாலம்

59. பாடியே யின்னமொரு வித்தை சொல்வேன்
    பண்பாக ஆம்.... ஒம்.... ஒம்...... கம்வாய் வென்று
ஆடியே லட்சமுரு செபித்தா யானால்
    அப்பனே ஜாலக்காள் பூசை செய்து
கூடியே நத்தையாஞ் சூரி வேரைக்
    கொண்டுவந்தே யைங்கோலக் கருவும் பூசி
நாடியே முன்கையில் வைத்து நீயும்
    நலமாக நீட்டி.தை முருக்கு வாயே.

விளக்கவுரை :

இன்னொரு ஜால வித்தைப் பற்றிக்  கூறுகிறேன் கேட்பாயாக. பயபக்தியுடன்"ஆம்... ஒம்... ஒம்.... கம்வாய்......" என்று லட்ச முறை செபித்துக் கொண்டு, ஜாலக்காளுக்குப் பூசை செய்து விட்டு நத்தைச் சூரி வேரைக் கொண்டு வந்து அதில் ஐங்கோலக் கருவைப் பூசிவிட்டு உனது முன் கைகளை நீட்டிப் பிடித்து நன்றாக முருக்கவும்.

60. முருக்கையிலே மந்திரத் தியான மோது
    முனிவாக மண்ணெடுத் தெதிரே போடு
இருக்கையிலே யெக்காளத் தாரை சின்னம்
    எளிதான கா்னாவும் வாங்காதப்பா
திருக்கையிலே நாகசுரங் கொம்பினோடு
    தெளிவான மகுடியொடு சங்கமாதம்
கருக்கையிலே யிவைகளெல்லாம் புடைக்கும் பாரு
    கனிவாகப் போகருட கடாட்சந்தானே.

விளக்கவுரை :

முருக்கும்போது மேற்படி மந்திரத்தைச் சொல்லி மண்ணை எடுத்து உன் எதிரே போடவும். பின்னா் மீண்டும் முருக்கவும். அச்சமயம் எக்காளம், தாரை, சின்னம், கா்னாடக வாத்தியம், நாகசுரம், கொம்பு, மகுடி, சங்கமாதம் போன்ற இந்த ஒசைகள் ஓலிக்கும். இவையெல்லாம் போகருடைய கடாட்சத்தினால் சித்திப்பாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar