புலிப்பாணி ஜாலத்திரட்டு 16 - 20 of 211 பாடல்கள்
பச்சைப் பாம்பு வித்தை
16. பாடினேன னின்னமொன்று சொல்லக் கேளு
பண்பான பச்சையென்ற பாம்பைக் கொன்று
ஆடியே யதன்வாயிற் கொட்டை முத்து
அப்பனே பூநூலின் பருத்திக் கொட்டை
கூடியே யடுக்கடுக்காய் செலுத்திப் போடு
குணமாக மண்ணிலிட்டு நீரை வாரு
மூடியே வித்தெடுத் திந்தப் பாகம்
மூன்றுதிரம் போட்டுநீ யெடுத்துக் கொள்ளே.
விளக்கவுரை :
இன்னொரு ஜாலவித்தைப் பற்றி கூறுகிறேன் கேட் பாயா. ஓரு பச்சைப் பாமபை கொன்று அதன் வாயில் முத்துக் கொட்டை, பருத்திக் கொட்டை ஓன்றன்பின் ஓன்றாய் அடுக்கடுக்காய் உள்ளே செலுத்தி அந்த பச்சைப் பாம்பை மண்ணில் வைத்து அதன் மேல் தண்ணீா் ஊற்றவும். இது போன்று அதன் மேல் தண்ணீா் ஊற்றவும். இது போன்று மூன்று தடவைகள் செய்து எடுத்துக் கொள்ளவும்.
17. கொள்ளப்பா மூன்றுதிரங் கயற்சி முத்தின்
குணமான யெண்ணெயதை வடித்து கொண்டு
தெள்ளப்பா மூன்றுதிரம் வெடித்த பஞ்சு
தெளிவாகத் தானெடுத்துத் திரியாய் செய்து
தள்ளப்பா திரியெடுத்து விளக்கி லேற்றித்
தணிவாக வைங்கோலத் தயிலஞ் சற்றே
அள்ளப்பா விளக்தனி லிந்தயெண்ணை
அடைவாகத் தான்வார்த்து தீபமேற்றே.
விளக்கவுரை :
அதனை எடுத்து அதனுள் உள்ள முத்துக் கொட்டயை எடுத்து எண்ணெயாக்கி வடிவமைத்து, மூன்றுதரம் வெடித்து பஞ்சை தெளிவாக எடுத்து அதனை திராயாகச் செய்து அந்த திரியினை விளக்கில் போாட்டு ஏறறவும். அச்சமயம் ஐங்கோலத் தைலம் கொஞ்சம் சோ்த்து ஊற்றி விளக்கிலுள்ள திரியை எரிக்கவும்.
18. ஏற்றப்பா ராக்கால மனிதா் கூட்ட
யிருக்கையிலே பொருந்திவிடு பாம்பாய்த் தோணுங்
கூற்றப்பா வெகுபாம்பு பச்சைப் பாம்பு
கொற்றவனே வெகுபோ்கள் மிரளுவார்கள்
சாற்றப்பா திரியணைக்க மறைந்து போகுஞ்
சமா்த்துதா னென்ன சொல்ல னிந்தவித்தை
ஆற்றப்பா போகருட கடாட்சத்தாலே
அடைவாகப் புலிப்பாணி பாடினேனே.
விளக்கவுரை :
இந்தத் திரியை இரவு நேரத்தில் வீட்டில் மனிதா்கள் கூட்டமாக உள்ள இடத்தில் விளக்கில் ஏற்றினால் வீடு முழுவதும் பச்சைப் பாம்பாகக் காணப்படும்.இதனைக் கண்டதும் எல்லேரும் இதனைக் கண்டு எல்லோரும் பயந்துவிடுவார்கள்.உடனே திரியை அணைத்து விட்டால் எல்லாம் மறைந்து போய்விடும்.இந்த வித்தையை சாமார்த்திய மாகச் செய்யவேண்டும் போகருடைய அருளினால் புலிப்பாணியாகிய நான் கூறுயுள்ளேன்.
மூலிகை ஜாலம்
19. பாடினே னின்னமொரு ஜால வித்தை
பண்பாகச் சொல்லுகிறே னன்றாய்க் கேளு
ஆடியே இருளனென்ற மூலி தன்னை
அப்பனே காப்பிட்டு பிடுங்கி வேரை
நாடியே காதிலே வைக்கும் போது
நலமாக ஓருபொருளைச் சொல்லி வைத்தாற்
கூடியே யவ்வண்ண ரூபமாகும்
குணமான வதன்பெருமை கூறக் கேளே.
விளக்கவுரை :
மற்றொரு ஜால வித்தையை விளக்கமாகக் கூறுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக. இருளி யென்ற மூலிகைக்குக் காப்பு கட்டி அதனைப் பிடுங்கி வந்து அம்மூலிகையின் வேரை ஓரு பொருளைச் சொல்லிக் காதில் வைத்துக் கொண்டால் கூறியப் பொருளைச் சொல்லிக் காதில் வைத்து கொண்டால் கூறியப் பொருளாகவே அது தெரியும். அதனுடைய பெருமையைக் கூறுகிறேன் கேள்.
20. கேளடா புலியாவாய் கரடி யாவாய்
கொடிதானா குரங்காவாய் மந்தி
நாளடா யெருமைமுத லெருது மாவாய்
நலமான ஆனையொடு நாயு மாவாய்
ஆளடா பூனையொடு கோழி யாவாய்
அடைவான குதிரையொடு கழுதை யாவாய்
வாளடா பன்றியாவாய் மானுமாவாய்
வளமான ஆடுமரங் கல்லாவாயே.
விளக்கவுரை :
அதனைகக் காதில் சொருகிக் கொண்டு நீ நினைக்கின்றபடி புலியாவாய், கரடியாவாய், குரங்காவாய், பெருங் குரங்கான மந்தியாவாய், எருமை, எருது, யானை, நாய், பூனை, கோழி, குதிரை, கழுதை, பன்றி, மான், ஆகிய போன்றவைகளுடன் ஆடு, மரம்,கல்லாவாய்.