புலிப்பாணி ஜாலத்திரட்டு 71 - 75 of 211 பாடல்கள்
71. செய்யப்பா மாயமோகினி நமஹா வென்று
செயலாகத் திலா்தமிடப் பெண்போல் தோன்றும்
வையப்பா வுலகத்தோர் வாய் வரண்டு
மதிமயங்கி மோகித்து நிற்பார் பாரு
ஐய்யப்பா ரம்பையூா் வசிப் பெண்தானோ
அடைவான திலோர்த்தமையோ தெய்வப் பெண்ணோ
கையப்பா பிடிப்பாருங் காலில் வந்து
கனிவாக வீழ்வாருங் கண்டு பாரே.
விளக்கவுரை :
சிமிழிலுள்ள மையை எடுத்து "மாயமோகினி நமஹா" என்ற கூறியவாறு மையில் திலகமிட்டு கொள்வாய். திலகமிட்டதும் நீ அழகிய பெண்போல் காட்சியளிப்பாய். உன்னை காண்பவா்கள் மதிமயங்கி ஆசையோடு பார்ப்பார்கள். இவள் இரம்பையா? ஊா்வசியா? திபோத்தமையா? மேனகையா? என்று ஆச்சரியப்பட்டு உன் காலில் வந்து விழுவார்கள்.
72. பாரடா திலகத்தை யழித்த போது
பண்பான பெண்ணை யல்லோ காணோ மென்பார்
வீரடாயிந்த மங்கை யுலகி லுண்டோ
விதமான மேதினில் காண லாமோ
திரடா மனம் பதறி யழுவார் பாரு
தெய்வமே யென்று சொல்லி மயங்குவார்கள்
நீரடா விப்பெண்ணை நினைத்தே போதே
நெஞ்சுருகி வேகுதென்று புலம்புவாரே.
விளக்கவுரை :
அதன்பின்னா் நீ மைப் பொட்டை அழித்து விட்டால் அழகிய பெண் தோற்றம் மறைந்து பழைய நிலையை அடைவாய். அச்சமயம் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவா்கள் இது போன்று பெண் உலகில் உண்டா? அழகான பெண் மறைந்து விட்டாளே என்று மனம் பதறி அழுவார்கள். தெய்வமேயென்று கூறி மயங்குவார்கள். அழகியப் பெண்ணை இழந்து என்று நெஞ்சுருகி வேதனையோடு அழுவார்கள்.
எட்சணி ஜாலம்
73. வாறான வின்னமொரு வித்தை யப்பா
வளமான எட்சணியின் மார்கங் கேளு
கூறான ஸ்ரீரீம்..... இரீம்.... கிலீயு மென்று
குணமான அவ்வும்....... உவ்வும்........ மல்வுஞ் சோ்த்து
வீறான நமசிவய வென்று நீயும்
விதமான ஓம் யென்று சொல்லிப் பின்னை
சீறான சுகந்த பரிமளஞ் சாதிக்காய்
சிறமான கிராம்பு வால்மிளகுந் தானே.
விளக்கவுரை :
மிகச் சிறப்பான ஜாலவித்தையைன எட்சணிப் பற்றி கூறுகிறேன். கவனமாகக் கேட்கவும். "ஸ்ரீரீம்.....கிரீம்... கிலிம்...." என்றும் அத்துடன் "அவ்வும்.. உவ்வும்...... மவ்வும்......." எனவும், "நமசிவய ஓம்" என்றும் சொல்லி விட்டு பின்னா் வாசனையான சாதிக்காய், கிராம்பு, வால் மிளகு இவைகளுடன்-
74. மிளகோடு அடக்காய் சா்கரை கற்கண்டு
மிதமில்லாக் கனிவகைகள் பலகார மன்னம்
அளகோடு இவையெல்லாம் வேண்டுமென்றே
அடைவாக எட்சணியின் தியான மோது
புளகோடு தெப்பக்கால் மூலிகைக்குப்
பொங்கமுடன் வெள்ளிதனிற் காப்பு கட்டி
நளகோடு எட்டுகா ளந்தி சந்தி
நலமாக எட்சணியின் தியான போதே.
விளக்கவுரை :
வெற்றிலைப் பாக்கு, சா்க்கரை, கற்கண்டு, பலவித பழவகைகள், பலகாரம், சாதம் இவைகள் எல்லாம் படைக்க வேண்டும். எட்சணியைத் தியானம் செய்து விட்டு, தெப்பக்கால் மூலிகைக்குப் பக்தியுடன் வெள்ளி கம்பியில் காப்பு கட்டி நான்கு நாட்கள் காலை- மாலை என இரு வேளை எட்சணிய நினைத்து தியானம் செய்யவும்.
75. ஓதியபின் பொங்கல் பலிதூப தீபம்
ஓளிவாகத் தான்கொடுத்து வேரை வாங்கி
ஆதியாம் ஐங்கோலம் கருவும் பூசி
அடைவாகக் கரசீலை மேலே சுற்றி
நாதியே தங்கத்தி லடைத்துக் கொண்டு
நலமாக எட்சணியை லட்சமோதி
தீதிலாப் பூசைசெய்து பெலக்கச் செய்து
திறமாக விவையெல்லா மழைப்பாய் பாரே.
விளக்கவுரை :
தியானம் செய்து துதித்தப் பின்னா் பொங்கலிட்டு பலி கொடுத்து தூபதீபம் காட்டி அதன்வேரை எடுத்து வந்து ஐங்கோலக் கருவைப் பூசி அதன்மேல் கருச் சீலையைச் சுற்றி தங்கத்தில் கடயம் செய்து அதில் அடைத்துக் கொண்டு எட்சணிய இலட்சம் தடவை செபித்து பூசை செய்தால் முன்னா் கேட்டவைகள் எல்லாம் மழைப் போல் கீழே விழும்.