5831. ஆச்சப்பா புலிப்பாணி
மைந்தாகேளு வன்புடனே சொல்லுகிறேன் வதீதமெத்த
மாச்சலென்ற வாரிஷியாஞ்
சித்துதம்மை வளமுடனே சொல்லுகிறேன் வண்மைபாரு
பாச்சலென்ற வயததுவும்
எழுநூற்றுச் சொச்சம் பாருலகில் நெடுங்காலமிருந்தசித்து
மூச்சடங்கி சிவயோகமான சித்து
மூதுலகில் இவர்போலுங் காணார்தாமே
விளக்கவுரை :
5832. காணாரே தவசியென்ற
வரரிஷியார்தானும் கருவாக காளிங்கமடுவுதன்னில்
வேணபடி தவயோகஞ் செய்யவென்று
விட்டகுறை தனையகற்றி மடுவிற்சென்று
தோணவே பனிரெண்டு
வாண்டுமட்டும் தொல்லுலகில் ஜலஸ்தம்ப சமாதியாகி
மாண்பரும் வையகத்தோர்
காணவென்று மார்க்கமுடன் வந்ததோர் சித்துதானே
விளக்கவுரை :
[ads-post]
5833. தானென்ற சித்ததுவும் ஜலரூபசித்து தாரணியில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
வானென்ற தேவாதி
ரிஷிகள்தம்மால் வரத்தினால் பேருபெற்ற சித்தேயாகும்
கோனென்ற வரரரிஷியார்
என்றுசொல்லிக் கொற்றவர்க்குக் குவலயத்தில் பேருண்டாச்சு
மானென்ற சித்தர்களும்
வணங்கியல்லோ மகத்தான ரிஷியாரைப் போற்றுவாரே
விளக்கவுரை :
5834. போற்றுவார் பூதலத்தார்
எல்லாருந்தான் பொங்கமுடன் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன்
தேற்றமுடன் வால்மீகர்
என்றசித்து தெளிவான மார்க்கமது சொல்வேன்பாரீர்
மாற்றமயம் நீங்கியல்லோ
வையகத்தில் வளமையுடன் வெகுகாலமிருந்த சித்து
ஆற்றலுடன் வால்மீகர்
ராமாயணத்தை அவனிதனில் மாந்தருக்கு செய்திட்டாரே
விளக்கவுரை :
5835. செய்ததொரு வால்மீகர்
வயதேதென்றால் செப்பமுடன் எழுநூற்றுச் சொச்சமப்பா
துய்யதமிழ் பண்டிதனாங்
கல்விவானாம் தூய்தான வகப்பேரு கொண்டசித்து
பையவே சமாதிமுகஞ்
சென்றதில்லை பாங்குடனே காயாதிகொண்டுதானும்
வெய்யவே நெடுங்கால
மிருந்தசித்து வேதாந் வால்மீகர் தானுமாமே
விளக்கவுரை :