போகர் சப்தகாண்டம் 6686 - 6690 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6686 - 6690 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6686. கூறினார் வாதநூல் அனேகஞ்சொல்லி குணமான பாகமதை விட்டறுத்து
தேறினார் நூல்களெல்லாம் முன்பின்னாக தஏற்றமுடன் கைமறைப்பாய்க்கட்டறுத்து
மீறியே சிலநூலில் உண்மைகூறி மிக்கான செய்பாகம் வேரறுத்து
சீறியே மாணாக்கர் தமைச்சினந்து சீரறுத்து வாரறுத்து திகைத்திட்டாரே

விளக்கவுரை :


6687. திகைத்ததொரு நூல்களெல்லாம் உளவாராய்ந்து தீர்க்கமுடன் காலாங்கிப் பதம்பணிந்து
பகைத்தொரு சித்தர்களைக் கரங்குவித்து பட்சமுடன் அஞ்சசிகள் மிகவுஞ்செய்து
வகையுடனே குளிகையது பூண்டுமல்லோ வளமான சீனபதி அடியேன்சென்று
தகமையுடன் குருபரனார் பதாம்புயத்தை தாள்பணிந்து சதாகாலந் தரிசித்தேனே

விளக்கவுரை :

[ads-post]

6688. தெரிசித்தேன் சமாதிமுகம் மதிவாய்நின்று தேற்றமுடன் குருவணக்க மதிகங்கூறி
புரிசடையோன் பதாம்புயத்தை மனதிலெண்ணி பூபாலா காலாங்கிநாதர்பாதம்
தெரியாத எந்தனுக்கு உகமைகூறி தெளிவான உபதேசம் மிகவேநண்ணி
சரியான சமாதியது பெறவேவேண்டி சட்டமுடன் வருளெனக்கு அருளென்றேனே

விளக்கவுரை :


6689. என்றதொரு வாக்கதுவும் கூறும்போது எழிலான காலாங்கி நாதர்தாமும்
தென்றிசையில் கும்பமுனி நாதருக்கு தேற்றமுடன் தரிசனைகள் தந்தாற்போல
சென்றதொரு எந்தனுக்கு வாசீர்மங்கள் தெளிவாக மனதுவந்து வதிகங்கொண்டு
கன்றழுகுங் காலமதில் தாயுவந்து கடும்பசிக்கு பால்கொடுத்த கதையைப்போலாச்சே

விளக்கவுரை :


6690. ஆச்சப்பா எந்தனுக்கு உபதேசங்கள் அவனிதனில் ஆரதுதான் சொன்னாரில்லை
மூச்சடங்கி சென்றதொரு காலாங்கிநாதர் முனையாக எந்தனுக்கு உண்மைகூறி
மாச்சலுடன் சமாதிமுகந் தானிருந்து மன்னவனே கருவிகரணாதியந்தம்
ஏச்சலது வாராமல் பெற்றுமல்லோ எழிலான சீனபதி கடந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar