6816. காணவே கருவூரார் என்றசித்து
காசினியில் மகிமைவெகு கண்டசித்து
தோணவே நடேசரைத்தா
னுண்டுசெய்த தோறாத கருவூரார் என்றசித்து
மானமருங் கல்வியுள்ள
சித்தரெல்லாம் மானிலத்தில் மதிப்பதற்குக் கீர்த்திகொண்ட
ஆணவமாங் காமியத்தை
விட்டொழித்த வப்பனே கருவூரார் என்றசித்தே
விளக்கவுரை :
6817. சித்தான சித்துமுனி
கருவூரார்தான் சிறப்பான காலாங்கி நாதர்முன்னே
சுத்தமுடன்
காலாங்கிநாதர்தம்மை சுந்தரனார் சீனபதி சமாதிதன்னில்
வித்தகனார் பார்த்திருக்க
மகிமைபூண்டு விண்ணுலகம் ஆகாயஞ் செல்வேனென்று
புத்தியுடன்
நட்சத்திரவளவுமட்டும் பரஞ்சுடரே செல்வேனென்று யேகினாரே
விளக்கவுரை :
[ads-post]
6818. ஏகவே வாசியோகஞ் செய்துகொண்டு எழிலான நட்சத்திரமண்டலத்தில்
போகவே மனவுறுதிகொண்டுமல்லோ
பொங்கமுடன் மூன்றுமண்டலந்தானப்பா
சாகாமல் ஆகாயமண்டலத்தில்
சட்டமுடன் மூன்றுமண்டலமிருந்து
வேகமுடன் வாசியோகஞ்
செய்துகொண்டு வேட்கையுடன் பூமிதனில் இறங்கிட்டாரே
விளக்கவுரை :
6819. இட்டாரே கருவூரார்
என்றசித்து எழிலான வையகத்தின் மகிமைகோடி
சட்டமுடன் செய்தல்லோ
யாகம்பூண்டு சதுராக நெடுங்காலந் தாமிருந்தார்
திட்டமுடன் காலாங்கி
நாதர்தாமும் தீர்க்கமுடன் கருவூரார் தன்தனக்கு
வாட்டமுடன் முதலியதோர் மகிமையெல்லாம்
வளமுடனே உபதேசஞ் செய்தார்பாரே
விளக்கவுரை :
6820. பாரப்பா புலிப்பாணி
பளிங்குள்ளானே பகருகிறேன் சித்தருட மகிமைதன்னை
ஊரப்பா சீனபதி தேசந்தன்னில்
வுத்தமனார் காலாங்கி நாதர்தம்மை
சேரப்பா சமாதியிடம்
சென்றுமல்லோ செம்மலுடன் காலாங்கி தம்மைக்காண
ஆரப்பா வென்றல்லோ
காலாங்கிநாதர் வப்பனே மனதுவந்து கூறென்றாரே
விளக்கவுரை :