6446. காணவே லவணவகை பற்பந்தன்னை
கருவாக முடித்தவர்க்கு யெல்லாஞ்சித்தி
பூணவே பாஷாண
முப்பத்திரண்டும் புகழாக லவணவகை பற்பத்தாலே
ஆணவங்கள் தானொடுங்கி
யடங்கிக்கொல்லும் ஆராதாரத்தைத்தான் மறைத்துவைத்தார்
வேணதொரு சரக்கெல்லாம் லவணத்தாலே
விஷங்கொண்டு மடிந்தல்லோ முடியும்பாரே
விளக்கவுரை :
6447. பாரேதான் லவணமதைக் கொண்டபோது
பாலகனே தேகமது சுசிவேயில்லை
நேரேதான் கந்தமது
இருக்கிக்காட்டும் நேர்மையுள்ள தேகமது வுளுப்பேயில்லை
சீரேதான் காயாதி கற்பமாகும்
சிறப்பான லவணத்தின் பற்பமல்லோ
வீரேதான் கவனமென்ற காரத்தாலே
வெகுவித்தை யாடுதற்கு யினமுங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
6448. கேளேதான் பற்பமது தானெடுத்து
கெடியான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
நீளவே களஞ்சியது ஒன்றுதாக்க
நிட்களங்கமானதொரு குருவினாலே
பாளமென்ற வெள்ளியது
பழுக்கும்பாரு பாருலகில் நாதாக்கள் செய்யும்வேதை
ஆளாவ மாற்றதுவும்
என்னசொல்வேன் வப்பனே பதினாறு மாற்றுகாணே
விளக்கவுரை :
6449. காணவே சிவயோகி மாண்பருக்கு
கருவான லவணமென்ற தங்கந்தானும்
பூணவே பூசைமுகஞ்
சொன்னதல்லால் புகழான வையகத்து மாண்பருக்கு
வேணபணி செய்வதற்கு சொன்னதல்ல
வேதைமுகந் தங்கமென்ற லவணந்தன்னை
மாணமருங் கல்வியுள்ள
வேடத்தோர்க்கு மகத்தான சிவயோகிக்காகும்பாரே
விளக்கவுரை :
6450. பாரேதான் புலிப்பாணி மன்னாகேளு பாருலகில் கருமியுள்ள மாண்பருண்டு
நேரேதான் அவர்வாசல்
காத்துநின்று நேர்மையுள்ள பழக்கமது செய்யவேண்டும்
சேரேதான் கிட்டிருந்த
பழக்கத்தாலே சேர்வையுடன் மனதுவந்து நூல்கள் கூர்வார்
வீரேதான் வாதமென்ற போக்கைக்
கேட்பார் வேறுபடதூறுபட மயங்குவாரே
விளக்கவுரை :