போகர் சப்தகாண்டம் 6646 - 6650 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6646 - 6650 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6646. வாறான யின்னமொரு போக்குசொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி மன்னாகேளும்
கூறான வெள்வங்கம் பலந்தானொன்று கொற்றவனே சூதமது பலந்தான்பாதி  
நீறான பாஷாண சுன்னமப்பா நெடிதான மூசையிட்டு வுருக்கியல்லோ
பேறுடைய பற்பமது குன்றியப்பா பெருமையுடன் உருக்குமுகந் தன்னில்தாக்கே

விளக்கவுரை :


6647. தாக்கவே வெள்வங்கம் உருகியல்லோ தகமையுள்ள நீரதனை யுரிந்துகொள்ளும்
தேக்கலென்ற வெள்ளீய வூட்டாங்காய்ப்பு தெளிவான நீரதுவும் மருகியல்லோ
நோக்கமுடன் பிறவியென்ற வெள்ளியாச்சு நெடிதான வங்கமதற் கசையாதப்பா
ஏக்கமது கொள்ளாமல் இந்தபாகம் எளிதாகச் செய்வதற்கு சித்தியாமே

விளக்கவுரை :

[ads-post]

6648. சித்தியாம் வெள்ளீயம் பிரயோகித்தால் சீரான சமுசாரிக்கான வித்தை
முத்திபெற வழியுண்டு ஞானமுண்டு மூதுலகில் நீயுமொரு சித்தனாவாய்
நித்தியமும் சிவானந்த நிலையில்நின்று நீதியுடன் சிவயோகந் தன்னைப்பாரு
சத்தியவான் வார்த்தையப்பா பொய்யாதப்பா சட்டமுடன் காலாங்கி சொன்னவாக்கே

விளக்கவுரை :


6649. சொன்னதொரு புலிப்பாணி மைந்தாகேளு சொகுசுள்ள கண்மணியே தீராமாரா
நன்னயமாய் பலநூலுங் கற்றுணர்ந்த நாதாந்த சித்தொளிவை நவில்வேனப்பா
உன்னிதமாய் நாகமென்ற லோகந்தன்னை வுற்பனமாய்த் தானெடுத்து வுண்மைபாரு
பன்னவே நாகமது தானெடுத்து பாலகனே உருக்கியல்லோ சாய்த்திடாயே

விளக்கவுரை :


6650. சாய்க்கவே இலுப்பைநெய் தன்னிலப்பா சட்டமுடன் சாரமதைக் கிராசமீய்ந்து
வாய்க்கவே பதினோரு முறைதானப்பா வளமுடனே யுருக்கிமிகச் சாய்த்தாயானால்
மாய்த்துமே சட்டையது சவளையாகி மகத்தாக நாகமது வொருகண்ணாகி
பேந்ததொரு மழையினால் மண்கசடான பேரான பிரீதிபோலிருக்கும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar