போகர் சப்தகாண்டம் 6666 - 6670 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6666 - 6670 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6666. பாரேதான் செந்தூரம் உண்டபேர்க்கு பாலகனே யேழானை பலமுண்டாகும்
நேரேதான் கிருஷ்ணாவதாரனைப்போல் நெடிதான ஸ்ரீலீலை மன்மதந்தான்
சீரேதான் செந்தூரந் தானுமல்லோ ஸ்ரீராமர் கொண்டதொரு கற்பமாகும்
வேறேதான் கற்பமது இதற்கீடுண்டோ வேதாந்தத் தாய்கொடுத்த கற்பமாச்சே

விளக்கவுரை :


6667. கற்பமாம் நாகமென்ற செந்தூரந்தான் காலாங்கி நாதருட கடாட்சத்தாலே
சொற்பமென்று நினையாதே துய்யபாலா சுந்தரனே சமுசாரிக்கானவித்தை
விற்பனர்கொண்டாடும் வேதைதன்னை விள்ளாதே யொருவருக்கும் விள்ளவேண்டாம்
அற்பமென்று நினையாதே வருண்மைந்தாகேள் ஆச்சரியமானதொரு மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

6668. மகிமையா மின்னமொரு போக்குசொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
அகிலமெலாந் தான்புகழும் காலாங்கிநாதர் வண்மையுடன் எந்தமக்கு சொன்னநீதி
சகிதமுடன் உந்தமக்கு ஞானோபித்து சகலகலை கியானமெல்லாம் உபதேசிப்பேன்
விகிதராய்க் கருமிகளும் உம்மைப்பற்றி வீரமுடன் நேசமது கொள்வார்பாரே

விளக்கவுரை :


6669. பாரான கருமிகளும் உம்மைவேண்டி பாருலகில் சினேகவதஞ்செய்யவென்று 
காரான நல்லவர்போல் வார்த்தைகூறி கடுஞ்சினத்தைமனதிலுன்னி மெய்யேகூர்வார்
நேரான சிடிகையென்ற வேதைமார்க்கம் நேர்மையுடன் தாமுரைக்க வதிதஞ்சொல்வார்
கூரான வார்த்தையது மிகவிடாமல் குணமுடனே நயனமதுவாய் நேசங்கொள்ளே

விளக்கவுரை :


6670. கொள்ளவென்றால் பூரணத்தைக் கேட்பாரப்பா கொற்றவனே மர்மமதை வெளிவிடாதே
தெள்ளுதமிழ் வாகடத்தைப் பேசுபேசு தேஜொளியில் சின்மயத்தை வெளியிடாதே
உள்ளதொரு பொருளெல்லாம் உவமையோடும் வுத்தமனே தடம்பிரித்து கேட்பாரப்பா
கள்ளமனமில்லாமல் கபடகற்றி கண்மணியே உண்மையது புகன்றிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar