போகர் சப்தகாண்டம் 6891 - 6895 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6891 - 6895 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6891. பாரேதான் பிரளயங்கள் வந்தபோது பாங்கான காலாங்கி மலையின்பேரில்
நேரேதான் நெடுங்காலந் தவசிருந்து நேர்மையுள்ள பிரம்மகுல சித்துதானும்
சீரேதான் கிரிதனக்கு கீழ்பாகந்தான் சிறப்புடனே தவமிருந்த ரிஷியார்தம்மை
ஆரோதான் காண்பதற்கு வையகத்தில் வப்பனே யாராலும் முடியாதன்றே

விளக்கவுரை :


6892. அன்றான காலாங்கி நாதர்தாமும் அறிவுடைய சித்துமகாரிஷியாரல்லோ
குன்றான பருவதத்தைத் தேடியேதான் குணமான காலாங்கி நாதர்தாமும்
சென்றாரே பரசுமகாரிஷியார்பக்கல் செம்பவள ரிஷியாரும் அருகிற்சென்று
நின்றாரே நெடுநேரம் முடிகள்சாய்த்து நீதியுடன் காலாங்கி பணிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6893. பணிந்திட்ட காலாங்கி நாதருக்கு பட்சமுடன் பரசுமகாரிஷியார்தாமும்
துணிந்திட்ட காலாங்கி நாதருக்கு துப்புரவாய் உபதேசங் கோடிவண்ணம்
அணிபெறவே வையகத்து மகிமையெல்லாம் வப்பனே உபதேசஞ் செய்தாரல்லோ
கணிதமுடன் காலாங்கி நாதர்தாமும் கருத்துடனே மலையைவிட்டு யேகினாரே

விளக்கவுரை :


6894. ஏகவே காலாங்கி நாதர்தாமும் எழிலான சீனபதி தன்னிற்சென்று
பாகமுடன் லோகவதிசயங்களெல்லாம் பாலித்தார் சீனபதிப்பெண்களுக்கு
ஆகமசாஸ்திர புராணங்களெல்லாம் அங்ஙனவே போதித்து வினயங்கூறி
போகரென்ற எந்தனுயும் சீஷனாக்கி பொங்கமுடன் நெடுங்காலம் இருந்திட்டாரே

விளக்கவுரை :


6895. இருந்தாரே இன்னமொரு வயணஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி எந்தன்மாரா
பொருந்தவே சீனபதி விட்டுநீங்கி பொங்கமுடன் காலாங்கிநாதர்தாமும்
திருந்தவே திரேதாயினுகத்திலப்பா தீர்க்கமுடன் பிரளயங்கள் வந்தபோது
அருந்தவசி யாயிருந்த ராமர்தன்னை அங்ஙனவே கண்டுமல்லோ மதித்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar