போகர் சப்தகாண்டம் 6906 - 6910 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6906 - 6910 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6906. கொடுக்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கோளாறு தான்சுற்றி மைந்தாகேளு
விடுக்கவே காலாங்கிநாதர்தாமும் விட்டகுறை இருந்ததொரு தன்மையாலே   
படுகளம் போல்பத்தாவ தாரந்தன்னை பாற்கடல்கள் சுற்றிவந்து பான்மைகொண்டார்
தொடுகுறிபோல் கலிக்கமகா ரிஷியார்தம்மை தோறாமல் கிரிதனையே கண்டார்தானே

விளக்கவுரை :


6907. தானான கலிக்கமகாரிஷியார்தன்னை தகமையுள்ள காலாங்கிநாதர் தாமும்
பானான கிரேதாயினுகத்திலப்பா பாங்கான மலைதனிலே கண்டாரங்கே
தேனான பிரளயங்கள் வந்தபோது தேற்றமுடன் மலைதனிலே நின்றசித்து
கோனான கொடுந்தவசியானசித்து கொப்பெனவே சித்துமகா பத்துமாமே

விளக்கவுரை :

[ads-post]

6908. பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங்காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகாரிஷியார்தாமும்
சுத்தமுடன் கிரேதாயினுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே

விளக்கவுரை :


6909. பாரேதான் காலாங்கி நாதர்தாமும் பட்சமுடன் எந்தனுக்குச் சொன்னநீதி
நேரேதான் அவர்களுந்தான் மனிதரன்றி நெடிதான தேவ அவதாரமல்ல
சீரேதான் கலியுகத்து மாண்பரெல்லாம் சிறப்புடனே தசாதாரக்கடவுளென்று
வேரேதான் இன்னமொரு தெய்வமுண்டோ வித்தகனே என்றல்லோ விதிக்கின்றாரே

விளக்கவுரை :


6910. வித்தகனே இவர்களெல்லாம் தெய்வமல்ல விண்ணுலகம் பதிப்பதற்கு கூடுமோதான்
செத்தவர்கள் கோடிமனு மாண்பருண்டு தேவாதி தேவரிஷியானபேரும்
கைத்தவங்கள் தான்மறந்து மண்ணாய்ப்போனார் காசினியில் யாவருந்தான் இப்படியேபோனார்
மெய்த்தவங்கள் செய்துமல்லோ காரம்பூண்டு வெகுகோடி மாண்பர்களும் இருக்கின்றாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar