6626. பாரேதான் வாரடித்துப் புடந்தான்போடு பாதகாண வெள்ளியது செம்பினாலே
நேரேதான் மாற்றதுவும்
அதிகங்காணும் நேர்மையுள்ள பிறவியென்ற தங்கமாச்சு
சீரேதான் இத்தங்கம்
சிவயோகத்தங்கம் சிறப்பான மாண்பர்களுக் குகந்ததங்கம்
ஆரோதான் சொல்வாரோ யுந்தமக்கு
வப்பனே யானுரைத்தேன் உண்மைபாரே
விளக்கவுரை :
6627. உண்மையாம் நவலோக செந்தூரத்தை
வுத்தமனே உந்தனுக்கு ஓதினேன்யான்
வண்ணமுடன் சீவனத்துக்
கிடமதாக வளம்பெரிய செந்தூரம் பதனம்பண்ணு
எண்ணரிய நற்பொருளை
குருவாயெண்ணி எளிதான வறைமை வருங்காலந்தன்னில்
கண்மறையுங் காலமது தானறிந்து
கண்மணியே சீவனத்துக் கிடந்தான்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
6628. கொள்ளவே வருமை
வருங்காலந்தன்னில் கொற்றவனே நவலோக செந்தூரத்தை
கள்ளமது வாராமல் மைந்தாகேளு
கணக்குடனே நாளொன்றுக் கிருநேரந்தான்
வள்ளலுயர் வணிகரிடம்
சென்றுமல்லோ வகையுடனே பணவிடைதான் பொன்தான்யீய்ந்து
உள்ளவரை சீவியநாளுள்ள
மட்டும் வுத்தமனே காலமது கழிக்கநன்றே
விளக்கவுரை :
6629. நன்றான செந்தூரம் பதனம்பண்ணு
நாதாக்கள் மறைத்துவைத்த செந்தூரந்தான்
குன்றான மலைபழுக்கும்
நவலோகந்தான் கொற்றவனே கருமிகட்கு மனம்விடாதே
தின்றாலும் ஒருவனாய்
மனதுவந்து தீர்க்கமுடன் மருமமதாயுண்பாயப்பா
அன்றெறித்த ஆதிசிவன்
உந்தனுக்கு வப்பனே தான்கொடுத்த வேதையாமே
விளக்கவுரை :
6630. வேதையா மின்னமொரு
போக்குசொல்வேன் வேதாந்தக் கண்மணியே புனிதவானே
கோதையர்கள் மாயவலை
சிக்கிடாதே கொற்றவனே சிக்கினால் மனம்விள்ளாதே
மாதாவின் சீர்பதத்தை
தாரிணியில் எப்போதும் தலைமேற்கொண்டு
சீதையுடன் ராமருந்தான்
இருந்தநேர்மை செப்பினதோர் கதைதனையே கண்டீர்தானே
விளக்கவுரை :