6796. மாண்பான சாஸ்திரத்தை
யுந்தன்சீஷன் மகத்தான புலிப்பாணிக் குபதேசித்தீர்
ஆண்மையுள்ள சித்தாதி
சித்தரெல்லாம் அவர்பேரில் மெத்த மனஸ்தாபமுண்டு
வீண்போன்ற சாத்திரமா
இருந்தாலல்லோ விருப்பமுடன் அவர்தமக்கு உபதேசிக்க
தாண்மையுள்ள சாத்திரந்தான்
சத்தகாண்டம் தாரணியில் சாத்திரங்கள் மெத்தவுண்டே
விளக்கவுரை :
6797. உண்டானசாத்திரத்தை
யவர்க்குமல்லோ வுத்தமனே மனதுவந்து உபதேசித்தீர்
கண்டாலும் விடுவாரோ
ரிஷிகள்தாமும் கருவான மகிமையென்ற வேதைமார்க்கம்
சண்டமாருதம்போல யுலகவாழ்க்கை
சட்டமுடன் வெகுகோடி யூதிவிட்டு
மண்டலத்தில் மகிமையெல்லாம்
வெளியிட்டாக்கால் மாண்பர்களும் ஒருவருந்தான் மதியார்தானே
விளக்கவுரை :
[ads-post]
6798. தானான சத்தகாண்டமேழாயிரந்தான் தகமையுடன் கூறிவிட்டீர் தோஷமில்லை
பானான யெண்ணாயிரஞ்
சாத்திரத்தை பகரவேண்டாம் புலிப்பாணி நாதருக்கு
தேனான சாத்திரத்தை மனதுவந்து
தேற்றமுடன் மேருகிரி தன்னிலப்பா
கோனான குகைதனிலே வைத்தாலல்லோ
கொற்றவனே லோகமெலாம் மதிப்பார்தானே
விளக்கவுரை :
6799. மதிப்பான சாத்திரத்தை
வெளியிலிட்டால் மகதேவர் ஆனவருமொருவருண்டோ
துதிப்புடனே யொருவருந்தான்
தன்னைத்தானும் துப்புரவாய் மதிப்பாரும் ஆருமில்லை
விதிப்படியே விட்டகுறை
இருந்துதானால் விருப்பமுடன் வினயம்வந்து கிட்டும்பாரு
கதிபெறுவர் எண்ணாயிரங்
காவியத்தால் காசினியில் அதிதமென்ற மார்க்கம்பாரே
விளக்கவுரை :
6800. பாரேதான் காண்டமேழாயிரத்தில்
பாருலகில் வெகுகோடி வதிசயங்கள்
நேரேரென் சித்தாதி
கூட்டத்தோடு நேர்மையுடன் பாடிவைத்த நுணுக்கமெல்லாம்
சேரேதான் கிட்டிருந்து
வுளவுகண்டு சேனரகசியங்களெல்லாம் வெளியாய்விட்டீர்
ஊரேதான் உலகமெலாம்
இதிலடக்கம் உத்தமனே யேழாயிரம் பாடல்தானே
விளக்கவுரை :