போகர் சப்தகாண்டம் 6361 - 6365 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6361 - 6365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6361. நன்றாக இறவாமல் முயற்சிதேடல் நலமான கற்புடைமை நண்ணல்வேண்டும்
குன்றான கொடியதொரு பாவம்நீக்கி குவலயத்தில் இருப்பவனே சன்மார்க்கன்தான்
தென்றிசையில் அகத்தியர்க்கு நேர்மையாக தேற்றமுடன் உபதேசஞ் செய்யவல்லோன்
நன்றிபுரி வேணாடு வாழுமாண்பர் நலமான சித்துமுனிக் குவமையாச்சே

விளக்கவுரை :


6362. ஆச்சப்பா பொய்சூது கபடுதந்திரம் வப்பனே நிந்தையுடன் நிலைமைமாறல்
பேச்சுடனே மெய்தவறல் பொறாமைகூறல் பேரான பேரின்ப நிலைமறத்தல்
மூச்சடங்கி மெய்போலே யாகஞ்செய்தல் முனையான நற்குருவை தூஷணித்தல்
ஆச்சரியமானதொரு களவுமார்க்கம் வப்பனே நீக்குவதும் உண்மைபாரே

விளக்கவுரை :

[ads-post]

6363. உண்மையாம் முன்புநயம் புரணிகூறல் வுத்தமரை வுதாசினங்கள் மிகவும்பேசல்
நண்மையாம் பெரியோரை பகடிகூறல் நலமுடனே பரிசுத்தோன் போலேகூறல்
கண்மையாம் மேன்மேலும் போர்விளைத்தல் கருவான போருக்கு முயன்றுநிற்கல்
தண்மையாம் சித்துமுனி நூல்களெல்லாம் தானறிந்த பித்தனைப்போல் பினற்றுவானே

விளக்கவுரை :


6364. பித்தனென்றால் சொல்லுகிறேன் இன்னங்கேளு பிணிதீர்க்கும் பண்டிதன்போல் பெயர்வகுத்து
சுத்தமுடன் காவிகஷாயம்பூண்டு சுந்தரனே யுபதேசங்கூறவல்லோன்
சத்திநெறி தவறாத தருமவான்போல் தாரணியில் வேடமது பூண்டுகொண்டு
புத்தியுடன் கோபமதை யற்றவன்போல் புலம்பியே திரிவானே கழுதைமாண்பே

விளக்கவுரை :


6365. மாண்பான வையகத்தில் அனேகரப்பா மார்க்கமுடன் பலபலவாய் வேஷங்கொண்டு
ஆண்பிள்ளை போலாக வீரங்கொண்டு அதட்டியே வார்த்தையது மிகவுங்கூறி
காண்பவர்கள் எல்லவர்க்கும் கருத்துளான்போல் கைதனிலே ருத்திராட்ச மாலைபூண்டு
வீண்பிள்ளை யாகவல்லோ திரிந்துகொண்டு விருதான வேஷமது கொள்வார்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar