போகர் சப்தகாண்டம் 6461 - 6465 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6461 - 6465 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6461. இல்லையே பத்துக்கோர் தங்கஞ்சேர்த்து யெழிலான வாரடித்துப் புடத்தைப்போடு
தொல்லையெனும் பிறவியது மாறாத்தங்கம் சயத்தங்கம் புடத்தங்கம் பசுமைத்தங்கம்
அல்லலது போக்கடிக்கும் அருமைத்தங்கம் ஆகாகாநாதாக்கள் மறைத்ததங்கம்
கல்லிலது விளைந்ததொரு தங்கந்தானும் கருவான தங்கமிதற் கொவ்வாதன்றே

விளக்கவுரை :


6462. அன்றான தங்கமது என்னசொல்வேன் அரகர நாதாக்கள் ஒளித்ததங்கம்
குன்றான சாத்திரத்தில் மறைத்ததங்கம் கோவேந்தர் சுட்டலைந்து கெட்டதங்கம்
வென்றிடவே யுந்தமக்கு ஓதிவைத்தேன் வேதாந்தக் கண்மணியே புத்திவானே
கன்றில்லாப் பால்கறந்த கதையைப்போல காசினியில் சித்தரெல்லாம் ஒளித்தார்தானே

விளக்கவுரை :

[ads-post]

6463. தாமான யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி தம்பிரானே
கோமானுக் கொப்பான கோவேகேண்மோ குவலயத்தில் எந்தனிட சத்தியவானே
ஆமான மானதொரு சாத்திரங்கள் வப்பனே வெகுகோடி நூல்கள்பார்த்து  
சாமானிய மானதொரு சூதவெள்ளி சாற்றுகிறேன் சன்மார்க்க புனிதவானே

விளக்கவுரை :


6464. புனிதமாஞ் சூதமது துலாமேவைந்து புகழான காடியென்ற காரந்தானும்
கனிவுடனே காரமது ஒன்றேயாகும் கனமான மூசைதனிலிட்டு மைந்தா
பனிபோன்ற வாறுவகை ஜெயநீர்தன்னால் பாங்குடனே மூசைதனில் நிறையவிட்டு
இனிதாக கலசமென்ற மண்பாண்டத்தில் எழிலாக மணலிட்டு மூசைவையே 

விளக்கவுரை :


6465. வைத்துமேல் மூடிசீலைசெய்து வளமாக மேலுமந்த மணலைக்கொட்டி
சத்தமது போகாமல் பாண்டமிட்டு சதுராக சீலையது வலுவாய்ச்செய்து
சுத்தமுடன் கணபதியைப்போற்றி செய்து சுந்தரனே நாற்சாம மெரிப்பாயப்பா
துத்தமெனுங் காடியென்ற சாரத்தாலே துடியான சூதமது மடியலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar