போகர் சப்தகாண்டம் 6806 - 6810 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6806 - 6810 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6806. பாரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பாங்கான புலிப்பாணி பளிங்குள்ளானே
நேரேதான் அவரவர்கள் மகிமைதன்னை நேர்மையுடன் சொல்லுகிறேன் உண்மையாக
சீரேதான் சித்தரெல்லாம் ஒன்றாய்க்கூடி சிறப்புடனே காலாங்கி நாதர்தம்மை
வீரேதான் சீனபதி தன்னிலேகி விருப்பமுடன் மனதுவந்து வந்திட்டாரே

விளக்கவுரை :


6807. வந்தாரே காயாதி கொண்டசித்து வளம்பெரிய சீனபதி மார்க்கந்தன்னை   
அந்தமுடன் காலாங்கி சமாதிபக்கல் வற்புதமாய் வெகுகோடி நாதர்தாமும்
சொந்தமுடன் எனதையர் காலாங்கிநாதர் சுடரொளியைக்காணவென்று மனங்களித்து
விந்தையாய் உபதேசம் பெறவேநண்ணி விருப்பமுடன் சமாதியிடம் வந்தார்தானே

விளக்கவுரை :

[ads-post]

6808. தானான நெடுங்காலஞ் சமாதிருந்த தண்மையுள்ள நாதாக்கள் ரிஷிகள்தாமும்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் முன்பாக வினயங்கூறி
தேனான மகத்துவங்கள் இதிகாசங்கள் தேற்றமுடன் செய்தல்லோ மேவல்செய்தார்
பானான பரஞ்சுடராம் எந்தன்நாதா பட்சமுடன் அதிசயத்தை கண்டிட்டேனே  

விளக்கவுரை :


6809. கண்டாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கனகரதி பூஷணமே கல்விவானே
அண்டமதில் ஆகாயந்தன்னிலல்லோ மகாபூதானந்தநாதர்
உண்டைவில்லு கவுண்டேகும் ஆகாயத்தில் வுத்தமனே யந்தமட்டுஞ் சொல்வேனென்று
கண்டிதமாய்க் காலாங்கி வாக்குந்தந்து கனமுடனே வாசியோகம் நடத்தினாரே

விளக்கவுரை :


6810. வாசியைத் தானடத்தி பூதநாதர் வளமான கேசரத்தினம் பரத்தில்
மாசியெனும் மண்டலத்தில் யேகியல்லோ மன்னவனார் மண்டலந்தான் அங்கிருந்து
காசிபதி கடலோரந் தன்னிற்சென்று கனமான சீனபதி யருகில்வந்து   
தேசியெனும் வாசியைத்தான் நடத்தியல்லோ தேற்றமுடன் சீனபதி இறங்கினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar