6981. செய்தேனே யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி செல்லவானே
துய்யநல்ல வூர்வசியாள்
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் என்மீதிற் கடாட்சம்வைத்து
வெய்யபுகழ் காலாங்கி
கடாட்சத்தாலே விருப்பமுடன் என்மீதில் மனதுவந்து
தையலெனும் வூர்வசியாள்
கடாட்சத்தாலே சட்டமுடன் சத்தகாண்டம் பாடினேனே
விளக்கவுரை :
6982. பாடினேன் புலிப்பாணி
மைந்தாகேளு பாலகனே வியாசமுனி நாதருக்கு
தேடியே யவர்பாதந்
தொழுதேனப்பா தேற்றமுடன் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
கூடியே கௌதமரிஷியாரின்தன்
கொற்றவனே யவர்பாதந் தொழுதுபோற்றி
நீடியே வஞ்சலிகள்
மிகவுஞ்செய்து நீதியுடன் அவர்பதத்தை பணிந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
6983. இட்டேனே திருமூலர்
சரணஞ்சொன்னேன் எழிலுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சட்டமுடன் பாம்பாட்டி
சித்தருக்கு சதகோடி நமஸ்காரம் செய்தேன்யானும்
திட்டமுடன் அவர்பாதந்
தொழுதுபோற்றி தீர்க்கமுடன் மேலுமஞ்சலிகள் செய்தேன்
பட்டமுடன் கடுவெளியார்
சித்தருக்கு பாலகனே நமஸ்காரஞ் செய்தேன்பாரே
விளக்கவுரை :
6984. பாரேதான் கமலமென்ற
முனியாருக்கு பட்சமுடன் சதகோடி சரணஞ்சொன்னேன்
சீரேதான் அவர்பாதந்
தொழுதுபோற்றி சிறப்புடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
நேரேதான் கைலாச ரிஷியாருக்கு
நேர்மையுடன் அவர்பாதந்தொழுதுபோற்றி
கூரேதான் நமஸ்காரம்
மிகவுஞ்சொன்னேன் கொற்றவனே புலிப்பாணி பண்புள்ளானே
விளக்கவுரை :
6985. பண்பான வஞ்சனமாம்
ரிஷியாருக்கு பாலகனே சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
நண்புடனே தான்பணிந்து
முடிகள்சாய்த்து நன்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
வண்பான நவகண்டர் பாதம்போற்றி
வளமுடனே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன்
திண்பான வஞ்சலிகள்
மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் கரங்குவித்து வணங்கினேனே
விளக்கவுரை :