போகர் சப்தகாண்டம் 6886 - 6890 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6886 - 6890 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6886. கண்டாரே புலிப்பாணி புனிதவானே காசினியில் இன்னும்வெகு வதிசயங்கள்
அண்டர்பிரா நாதாக்கள் ரிஷியார்தாமும் யாரேனுங் கண்டறிந்து சொன்னதுண்டோ
சண்டமாருதம்போல எந்தன்தேவர் சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்   
கண்டறிந்த வதிசயத்தை யாமுரைப்பேன் கண்மணியே விண்மணியே கழறக்கேளே

விளக்கவுரை :


6887. கேளப்பா எந்தனது காலாங்கிநாதர் கெடிதான திரேதாயினுகத்திலப்பா
ஆளப்பா கிரிசுத்தி வருகும்போது வப்பனே மலையோரம் வடபக்கந்தான்
மீளவே தவநிலையைப் பார்க்கவென்று மிக்கான சுனையருகே வந்தபோது
சூளப்பா ரிஷியார்கள் கூட்டத்தோடும் சுந்தரனே வாமமகா ரிஷிகண்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6888. கண்டாரே வாமமகாரிஷியார்தம்மை கருவான தேகமது வாமரூபம்
கொண்டதொரு திருமுகமும் மனிதரூபம் கோடான கோடியது நெடுங்காலந்தான்
அண்டமகா ரிஷிபோலே வாமர்தாமும் வருளான பெருந்தவசு தானிருந்தார்
கொண்டல் வண்ணன் அச்சுதன்போல் விசுவரூபம் கொடியதவம் செய்திருக்கக் கண்டிட்டாரே

விளக்கவுரை :


6889. கண்டாரே திரேதாயினுகத்திலப்பா கடுந்தவசு செய்திருந்த ரிஷியார்தம்மை
சண்டமாருதம்போலே தவசிருந்து சாங்கமுடன் வையகத்து மகிமையெல்லாம்
வண்டணியாள் ரேணுகையாள் மகிமைதன்னை வளமுடனே தானுரைத்தார் காலாங்கிக்கு
குண்ணதின் மேலிருந்து தவசியாகும் கூறினார் வெகுகோடி மகிமைதானே

விளக்கவுரை :


6890. தானான யின்னமொரு தண்மைசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி கனவானேகேள்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு சொன்னநீதி  
தேனான திரேதாயி னுகத்திலப்பா தேற்றமுடன் இருபதாமாண்டுதன்னில்
பானான பிரம்மகுல பரசுராமன் பெருந்தவசு தானிருந்த வண்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar