போகர் சப்தகாண்டம் 6911 - 6915 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6911 - 6915 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6911. இருக்கவே இன்னம்வெகு மகத்துவங்கள் எழிலான புலிப்பாணி கண்ணியவானே
பொருக்கவே வையகத்தின் மகிமையெல்லாம் பகட்டினேன் கணக்குண்டோ லக்கோயில்லை
பெருக்கவே துகைகண்டு விதிகண்டு பேரான ஸ்தலமகிமை யாவுங்கண்டு
குருக்கவே திசையெட்டும் மதிக்கும் நான்கும் கூரான தேவகோட்டை கூறுவேனே

விளக்கவுரை :


6912. கூறுவேன் புலிப்பாணி மன்னாகேளு கொற்றவனார் காலாங்கி சொன்னநீதி
பேறுடைய வையகத்தின் ஸ்தலங்களெல்லாம் பேர்வகுத்துச் சீர்வகுத்துப் பிரித்துச் சொன்னார்
ஆறுதலம் பஞ்சபூத ஸ்தலத்தைக்கண்டு வப்பனே எந்தனுக்கு ஓதினார்காண்
மாறுபடா ஸ்தலமகிமை யுந்தனுக்கு மார்க்கமுடன் வகைபிரித்து சொல்வேன்தானே

விளக்கவுரை :

[ads-post]

6913. தானான பஞ்சபூத ஸ்தலமேதென்றால் தாக்கான காளஸ்திரி காஞ்சியாகும்
தேனான திருக்காசி சிதம்பரந்தான் தெளிவான திருவருணை ஸ்தலமுமாகும்
பானான ஸ்தலத்தினது சேர்வை சொன்னேன் பாங்கான ஆராதாரங்கள் சொல்வேன்
மானான மகதேவர் மதுரையைத்தான் மகத்தான ஸ்தலமென்று மதிப்பிட்டாரே   

விளக்கவுரை :


6914. மதிப்பான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன் மகத்தான மதுரைக்குள் எண்பத்துநாலு
துதிப்புடைய சிதம்பரங் கோர்வைசொல்வேன் துப்புரவாய் பதினாறு ரெண்டுயெட்டு
யிதிலான வருணைக்குக் கோர்வைசொல்வேன் விற்பனனே சோடசமா மொன்றுநான்கு
மதிப்போன்ற காளஸ்திரி கோர்வைசொல்வேன் மார்க்கமுடன் கலைரெண்டு தசங்களொன்றே

விளக்கவுரை :


6915. ஒன்றான காசியின்றன் கோர்வைசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்தகூத்து
சென்றதொரு கோர்வையது யாதென்றாக்கால் செம்மலுடன் ஒன்று பத்து நான்கு எட்டு
நன்றான திருக்காஞ்சி கோர்வைசொல்வேன் நலமான பஞ்சம் ரண்டு சத்தம்நாலு
குன்றான கணக்குவகை யின்னஞ்சொல்வேன் குணமுள்ள புலிப்பாணி மன்னாகேளு

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar