போகர் சப்தகாண்டம் 6701 - 6705 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6701 - 6705 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6701. செய்துமே குருவணக்கம் மிகவுங்கூறி செயலான பாக்கியமும் அதிகங்கொண்டு
வையகங்கள் தான்புகழ புத்திவானாய் வளம்பெரிய நாதாக்கள் பதம்பணிந்து
துய்யநல்ல சிவவேடம் பூண்டுமல்லோ துப்புரவாய் யோகநிஷ்டை தனிலிருந்து
பையவே யுனக்குகந்த சீஷன்தேடி பாலகனே வுபதேசஞ் செய்வார்தானே

விளக்கவுரை :


6702. தானான யின்னமொரு போக்குசொல்வேன் தகமையுள்ள நற்பாலா பண்புள்ளானே
கோனான எனதையர் காலாஙிகிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவுடனே எந்தனுக்கு உபதேசித்தார்
பானான பரஞ்சுடரைப் போற்றியேதான் பாடுகிறேன் கொச்சியென்ற வேதைகாணே

விளக்கவுரை :

[ads-post]

6703. காணவே கொச்சியென்ற வீரமப்பா கவனமுடன் பலமதுதான் கொண்டுவந்து
தோணவே லட்சுமியாள் வீற்றிருக்கும் துகையான வில்வமது பழந்தான்பத்து
நீணவே பழமதனைக்கீறியல்லோ நீதியுடன் வீரமதை யுள்ளமைத்து
மாணவே சீலையது வலுவாய்ச் செய்து மயங்காமல் மணல்மறைவிற் புடத்தைப்போடே

விளக்கவுரை :


6704. போடவே இப்படியே பத்துமுறைபோடு போக்கான வீரமது கட்டிப்போகும்
நீடவே வீரமது கட்டினாக்கால் நீடாழி யுலகமெலாம் கட்டலாம்பார்
சாடவே வீரமதைத் தானெடுத்து சட்டமுடன் சமென்ற செந்தூரத்தை
ஆடவே பழச்சாற்றால் தானரைத்து வப்பனே வீரமதுக் கங்கிபூட்டே

விளக்கவுரை :


6705. பூட்டியே ரவிதனிலே காயவைத்து பொங்கமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
நீட்டியே மணல்மறைவிற் புடத்தைப்போடு நீதியுடன் வீரமது புகையடங்கி
தாட்டிகமாய் உருகியே கட்டிநிற்கும் தாடாண்மையானதொரு வப்புதானும்
கூட்டியே பின்னுமந்த வீரந்தன்னை குணமாக மறுபடியுஞ் செப்பக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar