6901. தவமான ரிஷியாருங்
கிரியைதன்னில் சட்டமுடன் நெடுங்காலந் தவசுகொண்டு
சவம்போலே மூச்சடங்கி
ரூபத்தோடும் சட்டமுடன் தவசிருக்கும் வண்மைதன்னை
பவமகற்று காலாங்கி
நாதர்தாமும் பண்புடனே முடிசாய்ந்து தலைகுனிந்து
நவகோடி யஞ்சலிகள்
மிகவுஞ்செய்து நாதாந்த சித்துருவே கெதியென்றாரே
விளக்கவுரை :
6902. கெதியென்று காலாங்கி
கேட்குங்காலம் கெடியான பலராமர் ரிஷியார்தாமும்
பதிதனையைத் தேடிவந்த
ரிஷியாருக்கு பட்சமுடன் ஞானோபதேசங்கூறி
மதிபோன்ற மகதேவர்
காலாங்கிக்கு மார்க்கமுடன் உலகவதிசயங்களெல்லாம்
இதிகாசபுராணமென்னும்
மறைப்பையெல்லாம் யிஷ்டமுடன் மனதுவந்து போதித்தாரே
விளக்கவுரை :
[ads-post]
6903. போதிக்க வின்னமொரு
வயணஞ்சொல்வேன் பொங்கமுடன் புலிப்பாணி புகழுள்ளானே
ஆதித்தன் சந்திரன்போல்
பௌத்மசித்து அரகராயென்னசொல்வேன் கிரியிலப்பா
ஜோதிபிரகாசமென்ற
காலாங்கிநாதர் சொர்ணமென்ற கிரியைதனில் செல்லும்போது
சாதியிலாதவனார் பௌத்மசித்து
சட்டமுடன் நெடுந்தவசி பார்த்திட்டாரே
விளக்கவுரை :
6904. பார்த்தாரே யென்தேவர்
காலாங்கிநாதர் பாரான மலைதனிலே தவசியாரை
சார்த்தகையாள் வார்போல
தவங்கள்பூண்டு சட்டமுடன் நெடுங்கால சித்துதம்மை
கோர்த்துமே சுரமெத்து
அஞ்சலித்து கொப்பெனவே காலாங்கி வணக்கஞ்செய்தார்
தீர்த்தமுடன் பத்திரமாந்
துளபமாலை தீர்க்கமுடன் தான்கொடுத்து வர்ணித்தாரே
விளக்கவுரை :
6905. வசனிக்கா ஞானோபதேசந்தன்னை
வளமுடனே பௌத்மமகாரிஷியார்தாமும்
நிசமுடனே மனங்களித்து
மனதுவந்து நிட்சயமாம் ஞானமென்ற இதிகாசத்தை
வசனமதாய் யுபதேசவுண்மையாக
வாக்களித்தார் காலாங்கி நாதருக்கு
தசமுடனே பஞ்தசா காயமாக்கி
சட்டமுடன் மனதுவந்து கொடுத்திட்டாரே
விளக்கவுரை :