போகர் சப்தகாண்டம் 6781 - 6785 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6781 - 6785 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6781. தானானஸ்ரீராமர் கொண்டசீதை தகமையுள்ள ஜானகியாள் தன்தனக்கு
கோனான கோவேந்தர் பதியிலப்பா கொற்றவனே சித்தர்களும் முடித்தவேதை
தோனான செம்பொன்னே தங்கவர்ணம் தேற்றமுடன் பிறவியென்ற தங்கமாகும்
பானான சுயத்தங்கம் நயத்தங்கம் பாருலகில் நாதாக்கள் மறைத்தார்காணே

விளக்கவுரை :


6782. காணவே நாதாக்கள் மறைத்ததாலே காலாங்கி நாதருட கிருபையாலும்  
தோணவே மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தோறாமல் உந்தனுக்கு மனதுவந்து
வேணதொரு நீதிமுறைபாடுகூறி வேதாந்த வுபதேச உண்மைகூறி
நீணவே யுந்தனுக்கு உபதேசித்தேன் நீடாழி பதவிதனை யாளுவீரே

விளக்கவுரை :

[ads-post]

6783. ஆளவென்றா லின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வப்பனே புலிப்பாணி யறிவுள்ளானே
நீளவே தாரமது சேர்தானெட்டு நிலையான காரமது சேர்தான்ரெண்டு
சூளவே துருசதுவும் சேர்தான் ரெண்டு சுந்தரனே சூதமது சேர்தான்ரெண்டு
மீளவே இவையெல்லாங் கல்வமிட்டு மிக்கான சிவகரந்தை சாற்றாலாட்டே

விளக்கவுரை :


6784. ஆட்டவே அற்சாமம் ஆனபின்பு வப்பனே மத்திரைதான் செய்துகொண்டு
தாட்டிகமாய் வெள்ளிதனை யுருக்கிமைந்தா சட்டமுடன் சேருக்கு பத்துதாக்கு
நீட்டமுடன் வெள்ளியது வுருகும்போது நிஷ்களங்கமானதொரு மருந்துதன்னை
வாட்டமில்லா சேரதுதான் ஒன்றுதாக்கு வளமுடனே வெள்ளியது வுரியும்பாரே

விளக்கவுரை :


6785. உரியுமே மாத்திரையை வாங்கிக்கொள்ளும் உத்தமனே மூசைதனை யாறவைத்து
சரியாக வைந்துநாள் தணியவிட்டு சாங்கமுடன் மறுபடியும் பின்னுமல்லோ
புரியான வெள்ளிதனை மூசையிட்டு பட்சமுடன் தானுருக்கி மருந்தையப்பா
வரியான கணக்குடனே முன்போலப்பா வளமுடனே சேருக்கு ஒன்றுதாக்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar