6431. தானான காலாங்கி சித்துபாலா
தண்மையுடன் யுந்தனுக்கு மூலிகற்பம்
கோனான மலைதனிலே சென்றுயானும்
கொற்றவனே யுந்தனுக்கு மூலிகற்பம்
தேனான செம்புரவி யுண்டகற்பம்
தேசமதில் மாண்பரெல்லாம் காணாகற்பம்
பானான சூரியனார் காணாகற்பம்
பட்சமுடன் மனதுவந்து கொடுக்கலாச்சே
விளக்கவுரை :
6432. கொடுக்கவே வருணரிஷி
தன்தனக்கு கொற்றவனார் உபதேசஞ் செய்தமூலி
நடுக்கடலில்
கருஷ்ணாவதாரங்கொண்ட நலமான கண்ணபிரான் மூலிதன்னை
அடுத்துமே ஆகாஸந் தான்பறந்து
அலைகடலில் மையமதில் இறங்கியல்லோ
எடுத்துமே வாய்தனிலே
கவ்விக்கொண்டு பசரியே மேற்பறந்து வருகலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6433. தருகவே மூலிதனை
சாபந்தீர்த்து சட்டமுடன் போகரிஷி நாதருக்கு
குருவுரைத்த கற்பமென்ற
மூலிதன்னை குவலயத்தில் ஒருவருக்கும் விள்ளாதப்பா
சருகுடைய மூலியின்தன்
கற்பத்தாலே லட்சாதி கோடிவரை இருக்கலாகும்
திருவருளால் உந்தனுக்கு
எல்லாஞ்சித்இ தீர்க்கமுடன் மூலிதனைப் பெற்றுக்கொள்ளே
விளக்கவுரை :
6434. கொள்ளவே யென்றுமல்லோ மனதுவந்து கொற்றவர்க்கு மூலிதனைக்கொடுத்துமேதான்
எள்ளளவும் நாதாந்த
சித்தர்தம்மால் எளிதாக ஏற்றமது நேராமற்றான்
உள்ளபடி ஞானோபதேசமார்க்கம்
வுத்தமனே தான்கொடுத்து வதிதங்கூறி
தெள்ளமுர்தமானதொரு
மாயாகற்பம் தெளிவுடனே செம்புரவி யீயலாச்சே
விளக்கவுரை :
6435. ஆச்சப்பா புலிப்பாணி
மகனேகேளு வட்டதிசை தான்கடந்து புரவிகண்டேன்
பாச்சலுடன் குளிகையது
மனதுவந்து பட்சமுடன் கண்ணபிரான் உண்ணகற்பம்
மூச்சடங்கி வருணரிஷி
கொண்டகற்பம் முனையான வசுவமது வுபதேசத்தால்
ஆச்சரிய மானதொரு கற்பந்தன்னை
வன்புடனே பெற்றுவந்தேன் என்றிட்டாரே
விளக்கவுரை :