போகர் சப்தகாண்டம் 6511 - 6515 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6511 - 6515 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6511. ஆச்சப்பா சரக்கு வறுபத்துநான்கும் வப்பனே வைந்தைந்தா யுகம்பிரித்து
மூச்சடங்கிக் கிடந்ததொரு தேருக்கப்பா முனையான சட்டமதில் தான்கள்பார்த்து
ஆச்சரியமாகவல்லோ சிகரமட்டும் வப்பனே தூணிருத்தி கால்கள்நாட்டி
மாச்சலென்ற வுபசாரங்கள் தொண்ணூற்றாறும் மார்க்கமுடன் அலங்கரித்து வரிசைகேளே

விளக்கவுரை :


6512. வரிசைபெற நவரத்னமொன்பதுந்தான் வளமைபெற கல்லாணி யாக்கிக்கொண்டு
அறிவுடைய சிம்பமதில் அத்திரந்தான் வப்பனே மூலிகையைக் கயற்போலாக்கி
புரிசடையோன் தம்பிரான்தன்னைதானும் புகழான தேர்மீதில் உச்சாடித்து
சரியுடனே மூலமதிற் தாள்கொண்டுபூட்டி தற்பரனை கள்ளாணி முடிக்கிடாயே

விளக்கவுரை :

[ads-post]

6513. முடுக்கவே கருவிகரணாதியந்தம் முனையான உடல்பொருள்களாவியெல்லாம்
தொடுக்கவே யண்டசராசரங்கள் மட்டும் தோறாமல் தாம்கண்டவேதைகோடி
நடுக்கடலில் நாணியறுந்திட்டார்போலே நலமான பூதமெல்லா மொன்றேயானால்
படுகணையில் மாறன்விட்ட வம்புபோலே பாரினிலே வாதமது பலிக்கும்பாரே

விளக்கவுரை :


6514. பலிக்குமே அறிவுடையோன் செய்துகொள்ளும் பாங்கான வேதைமுகங் கோடாகோடி
ஜொலிக்குமே பிரணவத்தால் மூலிகட்டும் சோராமல் சரக்கெல்லாம் சுருண்டுமாளும்
ஒலிக்குமே லோகமெலாம் ஒன்றாய்க்கூடி வுத்தமனே வாதத்த்துக் குறுதியாச்சு
சலியாத சரக்கெல்லாம் ஐந்தைந்தாக சட்டமுடன் செய்வார்க்கு வாதமாமே

விளக்கவுரை :


6515. வாதமென்றால் சரக்குகளுள் பஞ்சபூதம் வளமான பூதமதில் ஒன்றுதப்பில்
கீதமென்ற கின்னரிக்கு நாணற்றாப்போல் கீர்த்தியுள்ள சரக்கெல்லாம் விழலாய்ப்போகும்
தோதமுடன் வாதமது காணவென்றால் தோறாமல் பஞ்சபூதத்தைப்பாரு
பேதமது வாராது பூதங்கண்டால் பேரான வுலகினிலே சித்தாவாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar