போகர் சப்தகாண்டம் 6401 - 6405 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6401 - 6405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6401. பகட்டவே இருவாயுந் தைத்துமல்லோ பொங்கமுடன் தாளியென்ற பாண்டந்தன்னில்
அகலமது சாணதுவும் விரல்தான் நாலு வப்பனே பூநீரைப் பரப்பிமைந்தா
நிகலவே நாரையென்ற பட்சிதன்னை நிஷ்களங்கமாகவல்லோ பாண்டம்வைத்து
புகலவே மேலுமந்த பூநீர்விட்டு புண்ணியனே மேற்பாண்டந் தன்னைமூடே

விளக்கவுரை :


6402. மூடவே சீலையது வலுவாய்ச் செய்து முசியாமல் தானெரிப்பாய் இரண்டுசாமம்
நீடவே பட்சியது வந்துமல்லோ நீதியுடன் தீயாறி எடுத்துப்பாரு
கூடவே மேலிருந்த பாண்டம்நீக்கி குற்றமற மாமிசத்தை எடுத்துமைந்தா
சாடவே குழிக்கல்லில் தன்னிலிட்டு சட்டமுடன் இரும்புலக்கை தன்னாற்சாடே

விளக்கவுரை :

[ads-post]

6403. சாட்டியபின் சூரணமாய்ச் செய்துகொண்டு சாங்கமுடன் சூரணத்தில் நாலுக்கொன்று
தாட்டிகமாய் பஞ்சமுஷ்டி தானுஞ்சேர்த்து சட்டமுடன் பஞ்சதிரவியங்களனைத்தும்
வாட்டமுடன் திரிகடுகு திரிபலாதி வகைவகைக்கு நாலுக்கொன்றுசேரு
பூட்டவே இத்தாதி சரக்கையெல்லாம் புகழ்பெறவே நெய்தேனும் விட்டுக்கிண்டே

விளக்கவுரை :


6404. கிண்டியே பரணிதனில் பதனம்பண்ணு கீர்த்திபெற வுண்பதற்கு விபரங்கேளு
தண்டகம்போல் இருவேளை யுண்பாயானால் தாட்டிகமாய் வாசியது மேல்நோக்காது
மண்டலந்தான் கொண்டவர்க்கு வாசியோகம் மகத்தான மார்க்கமெல்லாம் வழியேகாட்டும்
சண்டமாருதம்போலே இந்தகற்பம் சாங்கமுடன் உண்பவர்க்கு பலனைக்கேளே

விளக்கவுரை :


6405. கேளப்பா குளிகையது கொண்டபேர்க்கு கெடியான சின்மயத்தில் ஒடுக்கவாசி
நாளப்பா தன்மயமுங் காணாமற்றான் நலமான வாசிவழிக்கிடங்கொடுக்கும்
ஆளப்பா வாறாதாரத்தை காட்டும் வப்பனே யதிலொடுக்கம் கலைகள் ரெண்டும்
தேளப்பா கொட்டினதோர் விஷத்தைப்போலும் தேஜொளிவின் பூரணத்தைக் காணலாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar