போகர் சப்தகாண்டம் 6451 - 6455 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6451 - 6455 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6451. மயங்குவார் பலநூலு மறிந்தாற்போலே மார்க்கமெல்லாந் தெரிந்ததொரு மவுனிபோலும்
தியக்கமுடன் நூல்பார்த்துத் தெரிந்தோர்போலும் தீர்க்கமுடன் பவமகற்றி இருந்தோர் போலும்
தயக்கமது கொண்டல்லோ வாதுகூறி தப்பாமல் வேதைமுகங் கேட்பார்பாரு
நயம்படவே யவர்களுக்கு யிதவுகூறி நன்மையுடன் இருப்பதுவும் நன்றாய்பாரே

விளக்கவுரை :


6452. நன்றான வார்த்தையது மிகவுங்கூறி நலம்பெறவே யவர்களுக்கு மதிகள்கூறி
குன்றான சாத்திரங்கள் கற்றநீங்கள் குவலயத்தில் வேதைமுகம் வேணதுண்டு
வென்றிடவே யுந்தமக்கு வேறுண்டோசொல் வேதாந்த சித்துமுனி யார்தானுண்டோ
சென்றவர்கள் மடிந்தவர்கள் கோடாகோடி ஜெகதலத்தில் உம்மைப்போல் சித்துகாணே

விளக்கவுரை :

[ads-post]

6453. சித்தான நாதரையாம் கண்டதில்லை சிறப்புடைய நாதரவர் நீர்தானென்று
புத்தியுள்ள பூபால ரும்மைப்போல பூவுலகில் பெரியோரைக் கண்டதில்லை
சத்தியத்தில் மிகுந்ததொரு தருமவான்போல் சட்டமுடன் முகதாவில் வந்தீரென்று
புத்தியுடன் தந்திரமாய் வார்த்தைகூறி புனிதனே விட்டகற்றல் மெத்தநன்றே

விளக்கவுரை :


6454. நன்றான வார்த்தையது மிகவுங்கூறி நலமுடனே பொய்ப்புகட்டு யாவுங்கூறி
சென்றிடவே பின்தொடர்ந்து வழிதான்விட்டு ஜென்மமுளஃள ஜீவந்தானுள்ளமட்டும்
வென்றிடவே யெப்போதும் மறக்கேனென்றும் வேதாந்த சித்தொளிவைப் பணிவேனென்றும்
குன்றியே முகம்வாடி மனதுவந்து குருபரனே தந்திரமாய்ப் பணிகுவாயே

விளக்கவுரை :


6455. பணியவே கருமியென்ற சீடருக்கு பாலமுர்தம் உண்டதொரு சந்தோஷம்போல்
கணிதமுடன் தமக்குகந்த சீடனென்று கருத்துடனே யுன்மீதிற் பட்சம்வைத்து
அணிபெறவே விழியில்லான் என்றுவந்து வப்பனே கடாட்சமது மிகப்புரிந்து
துணிவுடனே யுன்மீதிற் கிருபைவைத்து துப்புரவாய் பற்பமது கொள்ளார்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar