போகர் சப்தகாண்டம் 6711 - 6715 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6711 - 6715 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6711. காணலாம் வீரமணி தனையெடுத்து கனமான மதகரியின் மேலேசென்று
பூணவே வீரமணி கட்டினேன்யான் புகழாக எதிரியென்ற மாண்பர்தம்மை
வேணவே மண்டதனைபிளப்பேனென்று விருதுபறை யறைந்திடலாம் மணியினாலே
நாணவே சித்தாதி முனிவர்தாமும் நடுங்குவார் மணிதனையே கண்டபோதே

விளக்கவுரை :


6712. கண்டதொரு நாதாந்த சித்துதாமும் கனமுடனே யுந்தனைத்தான் போற்றுவார்கள்
மண்டலத்து ராஜாதி ராஜர்தாமும் மகாவீரனென்றல்லோ மதிப்பார்தாமும்
கொண்டல் வண்ணன் அச்சுதனார் கிருஷ்ணாவதாரன் குவலயத்தில் கொண்டதொரு குளிகையென்பார்
தெண்டிரை சூழ்மாண்பரெல்லாம் உம்மையல்லோ தேர்ந்ததொரு சித்துமுனி என்பார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6713. பாரேதான் வீரமென்ற குளிகைதன்னை பாங்குடனே தானெடுத்துப் பகரக்கேளு
நேரேதான் ஆவினது முதுகின்பேரில் நேர்மையுடன் தான்வைக்கப் பால்கெடாது
சீரேதான் வீரமணி யாட்டந்தன்னால் சிறப்பான பாலதுவுஞ் சுவறிப்போகும்
நீரேதான் மணியதனை எடுத்தாயானால் நிஷ்களங்கமான பால்சுரக்கும்பாரே

விளக்கவுரை :


6714. சரக்குமே மணியதனை எடுத்துபாலா சுந்தரனே சொல்லுகிறேன் சூட்சம்பாரு
இரக்கமுடன் உன்மீதில் மனதுவந்து எழிலான மணியினது பூட்டகத்தை 
திறக்கவே மணியென்ற வண்மைதன்னை தீர்க்கமுடன் புகலுகிறேன் தின்னம்பாரு
பறக்கவே வாயுவேகந் தன்னைப்போலே பாரினிலே வாயிலிட்டு நடக்கலாமே  

விளக்கவுரை :


6715. நடக்கவே செந்தூரம் நெடுங்காலந்தான் நடராஜ சுந்தரனே நவில்வேனப்பா
அடக்கமுடன் குளிகைதனை வாயிலிட்டு அவனியெலாம் நடந்தாலும் அசைந்திடாது
படம்வரையும் மாதர்தனைப் புனர்ந்திட்டாலும் பகரவே கூடாது லீலாவண்ணம்
சடமதுவும் தோன்றாது யுந்தமக்கு சட்டமுடன் குளிகைதனைக் கொள்வீர்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar