போகர் சப்தகாண்டம் 6641 - 6645 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6641 - 6645 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6641. துலக்கமாம் வெள்ளியது என்னசொல்வேன் துப்புரவாய்ச்சூதமென்ற வெள்ளியாச்சு
பலத்ததொரு சிவராச வெள்ளிதன்னை பாருலகில் நாதாக்கள் மறைத்துவைத்தார்
சுலபமென்ற வேதைமுகங் காணாமாண்பர் சுந்தரனே வெகுகோடி மாண்பரப்பா
கலக்கமது வாராது சூதவெள்ளி கருவான வங்கத்துக்கு அசைந்திடாதே

விளக்கவுரை :


6642. அசையாது சோதனைக்கு வுறுதிவெள்ளி வப்பனே நாதாக்கள் நூலறிந்து
வகையொன்றும் நேராமல் தாள்பணிந்து வஷ்டாங்க யோகநிலைத் தன்னிற்சென்று
திசையெட்டுங் குளிகையது யானுங்கொண்டு திருவிளையாள் மனோன்மணியாள் போற்றிசெய்து
இசையுடனே யுந்தமக்கு இந்தபாகம் இன்பமுடன் தான்கொடுத்த வேதையாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6643. ஆச்சப்பா கைபாகஞ் செய்பாகந்தான் வப்பனே வினயமென்ற பதமறிந்து
மூச்சடங்கி நெடுங்கால மிருந்தசித்து முனையான பாகமதைக் கைமறைத்தார்
பாச்சலுடன் அடியேனுங் குளிகைகொண்டு பாருலகைச்சுத்தியல்லோ மனதுவந்து
வீச்சுடனே யுந்தமக்கு ஓதிவைத்தேன் விட்டகுறை இருந்ததினால் வாய்க்கலாச்சே

விளக்கவுரை :


6644. வாய்க்கவே முன்செய்த புண்ணியத்தால் வளமான வினயமென்ற வெள்ளிப்போக்கு
தாய்க்கமலந் தாள்பணிந்த புண்ணியத்தால் சட்டமுடன் உந்தமக்குக் காணலாச்சு
பேய்பிடித்து மாண்பரெல்லாம் வாதந்தேடி பேரானநிலைகடந்து பதிகடந்து
மாய்கையெனும் சமுசார மிட்டிழந்து மாடிழந்து வீடிழந்து மாண்டார்தாமே

விளக்கவுரை :


6645. மாண்டாரே வையகத்தில் கோடிமாண்பர் மானிலத்தில் கணக்குண்டோ லக்கோயில்லை
வேண்டியதோர் கருமான மனேகங்கொண்டு விட்டகுறை யில்லாமல் விழலாய்ப்போனார்
காண்டவம்போல் பூர்வீக புண்ணியத்தால் தற்பரனே யுந்தமக்கு இந்தபாகம்
ஆண்டகையாள் மனோன்மணியாள் கடாட்சத்தாலே வப்பனே யுந்தமக்கு வந்தவாறே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar