6581. பெருமையாம் சண்டரசமென்ற
பற்பம் பேருலகில் நாதாக்கள் மறைத்துமல்லோ
அருமையா முள்ளதொரு
பற்பந்தன்னை வப்பனே தான்மறைத்துப் பாடிவைத்தார்
ஒருமையாம் எல்லவரும்
அறிவதற்கு உத்தமனே உந்தமக்கு உகமைகூறி
பெருமையாய் யானுரைத்தேன்
உந்தமக்கு பேரான கைமுறையை தெரிந்துகொள்ளே
விளக்கவுரை :
6582. கொள்ளவே சண்டரச போக்குசொல்வேன் குறிப்பான ரோகமதைக் கொல்லும்வேகம்
விள்ளவே ரோகமது என்னவென்றால்
வீறான சூலையது பதினெட்டும்போம்
உள்ளதொரு குன்மமது
யெட்டும்போகும் ஓகோகோ பாண்டுவகை யாறுந்தீரும்
கள்ளமிலா பித்தமது
நாற்பதும்போகும் கருவான வாதமென்பதுவும்போமே
விளக்கவுரை :
[ads-post]
6583. போமேதான் வாயுவென்ற
ரோகம்போகும் பொல்லாத பீலிகையும் மகோதரம்போம்
ஆமேதான் கெவுசியென்ற
கெண்டைபோகும் வப்பனே விக்கலென்ற வுளமாந்தைபோகும்
நாமேதான் சொன்னபடி வயிற்றுவலிபோகும்
நலமான சோகையொடு பிரமேகம்போம்
வேமேதான் மேகமது
இருபதுவும்போகும் வேகமுடன் விஷபாகந் தீருந்தானே
விளக்கவுரை :
6584. தானான கயரோகம் செயரோகம்போம்
தாக்கான இருமலொடு வீனைகச்சும்
கோனான மண்டையில் சூலைபோகும்
கெடிதான கருப்பனென்ற வியாதிபோகும்
பானான படர்தாமரை
கருப்புபோகும் படையோடு சில்விஷங்கள் எல்லாந்தீரும்
தேனான காலாங்கி நீதிவாக்கு
தேசமதில் பொய்யாது மெய்யதாமே
விளக்கவுரை :
6585. மெய்யான சில்விஷமாங்
குஷ்டம்போகும் மேலான விப்புருதிழகண்டமாலை
வெய்யவே கிராணியது
கழிச்சல்போகும் வெளுப்பான சீழ்மூலம் நவமூலம்போம்
துய்யதொரு பவுத்திரமும்
மறையாப்பும்போம் துலையாத புத்துவுடல் யோனிச்சூலை
எய்யவே மந்தார காரம்போகும்
எழிலான நேத்திரநோய் போகும்பாரே
விளக்கவுரை :