போகர் சப்தகாண்டம் 6416 - 6420 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6416 - 6420 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6416. கொள்ளவே நயம்பெறவே கற்பந்தன்னை குணபாகங் கைபாகஞ் செய்பாகத்தால்
மெள்ளவே குளிகைதனை முடித்துக்கொண்டு மேதினியில் நீயுமொரு சித்தனைப்போல்
உள்ளதொரு வேஷமதை விடுத்துமல்லோ வுத்தமனே சிவராஜ யோகன்போலே
விள்ளவே நெடுங்கால மிருப்பதற்கு விருப்பமுடன் காயாதி கற்பமுன்னே

விளக்கவுரை :


6417. உண்ணவே மண்டலந்தான் அந்திசந்தி வுத்தமனே மயில்கற்பங்கொண்டாயானால்
திண்ணமுடன் நரைதிரையு மற்றுப்போகும் தீர்க்கமுடன் நெடுங்காலம் இருக்கலாகும்
வண்ணமுடன் காயாதி கற்பத்தாலே வளமான வாசிதனை நடத்தலாகும்
திண்ணமுடன் காலாங்கி நாதர்தானும் சட்டமுடன் எந்தனுக்கு ஓதினாரே

விளக்கவுரை :

[ads-post]

6418. ஓதவே காயாதி கற்பந்தன்னை வுத்தமனே யுந்தனுக்கு உரைத்தேனப்பா
நீதமுடன் காயாதி கற்பமுண்டு நீணிலத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
தோதகமாய் என்காலஞ்சென்ற பின்பு துப்புரவாய் லோகாதிலோகமெல்லாம்
சாதகமாய்த் தான்திரிந்து மைந்தாநீயும் சட்டமுடன் சீனபதிக்கேகுவீரே

விளக்கவுரை :


6419. ஏகவே யுந்தமக்கு வரமுந்தந்தேன் எழிலான மகிமையெல்லாந் தானுரைத்தேன்
போகவே குளிகையது பூண்டுகொண்டு பொங்கமுடன் காயாதி கற்பமுண்டு
சாகாம லிருப்பதற்கு வினயங்கொண்டு சட்டமுடன் காயாதி கற்பந்தன்னை
ஆகாயந் தனிற்செல்ல குளிகைதானும் அப்பனே யுந்தமக்கு தந்திட்டேனே

விளக்கவுரை :


6420. தந்தேனே என்றுசொல்லி போகர்தாமும் சட்டமுடன் சீனபதிக் கேகியல்லோ
அந்தமுடன் சீனபதிப் பெண்களுக்கு யவனிதனில் நடந்ததொரு வதிசயங்கள்
சொந்தமுடன் தாமுரைத்து சித்துதாமும் சுந்தரனார் காலாங்கி சமாதிபக்கல்
விந்தையது யின்னமிகக் காணவென்று விருப்பமுடன் குளிகையிட்டு சென்றிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar