போகர் சப்தகாண்டம் 6486 - 6490 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6486 - 6490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6486. சாற்றவென்றால் உப்பினிட கட்டினத்தை சாங்கமுடன் குகையிலிட்டு உருக்கிமைந்தா
திட்டமுடன் குழலொன்று செய்துமல்லோ தீர்க்கமுடன் நாலுபட்டையாகச்செய்து
வட்டமுடன் உப்பதனை யுருக்கிமைந்தா வளமையுள்ள கருங்குழலில் பாய்ச்சியேதான்
நாட்டமது நேராமல் கருவைநீக்கி நயம்பெறவே வுப்பதனை யெடுத்திடாயே

விளக்கவுரை :


6487. எடுத்துமே உப்பதனைச் சொல்லக்கேளு எழிலான பஞ்சவர்ணமேற்றப்பாரு
தொடுத்ததொரு லிங்கமதை யரைத்துமைந்தா தோறாமல் ஒருபக்கம் பூசிப்போடு
விடுத்ததொரு தாளகத்தை யெடுத்துபாலா விருப்பமுடன் ஒருபக்கம்பூசிப்போடு
படுத்ததொரு கெந்தகத்தை யறைத்துமைந்தா பாங்குடனே ஒருபக்கம் பூசிப்போடே

விளக்கவுரை :

[ads-post]

6488. போடேதான் கெவுரியது எடுத்துமைந்தா பொங்கமுடன் ஒருபக்கம்பூசிப்போடு
ஆடேதான் நாற்சரக்குமானபின்பு வப்பனே சீலையது வலுவாய்ச்செய்து
நாடேதான் ரவிதனிலே காயப்போடு நலமான புடமதுவுங் கோழியாகும்
தேடவே புடம்போடு எடுத்துப்பாரு தெளிவான வர்ணமது தோற்றும்பாரே

விளக்கவுரை :


6489. தோற்றவே பக்கமொரு வர்ணபேதம் தோறாத கம்பியுப்பு சாரணையேயாக்க
மாற்றதுவும் சொல்லவென்றால் நாவேயில்லை மகத்தான சாஸ்திரந்தானோடும்பாரு
ஆற்றவே லிங்கமது மாற்றாயிரந்தான் வப்பனே சொல்வதற்கு நாவுமில்லை
தேற்றமுடன் தாளகமும் ரெண்டாயிரம் மாற்று தெளிவான வுப்பினிட வேகம்பாரே

விளக்கவுரை :


6490. வேகமாங் கெந்தியது மூவாயிரமாற்று வெழிலான வேதைமுகஞ் சொல்லொண்ணாது
பாகமுடன் கெவுரியது ஐந்நூறு மாற்று பஅங்குடனே வேதைமுகஞ் சொல்லும்பாரு
சாகமுடன் வுப்பினிட மேற்பட்டையப்பா சதானந்தர் வைகுந்தர் அறிவாரோதான்
போகமது கொண்டதொரு காலாங்கிநாதர் பொன்னவனே எந்தனுக்கு உரைத்தார்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar