6406. காணலாஞ் சுழுத்தியிலே
இருந்துகொண்டு கருவிகரணாதியந்தம் மேலேதொட்டு
பூணலாம் விசுத்தியிலே
வாசிநாட்டி புகழ்பெறவே வனாகதத்தை மேலேபூட்டி
தோணவே சுடரொளியைத்
தாக்கும்போது சூட்சமென்ற தலைதனையே பிரித்துக்காட்டும்
மாணவே மாயாதி சித்தரெல்லாம்
மார்க்கமுடன் மறைத்துவைத்தார் உண்மைபாரே
விளக்கவுரை :
6407. உண்மையாய் வாசிதனை
நடத்தும்போது வுத்தமனே சிகரமது மூஞ்சிக்காட்டும்
தண்மையாய் நடுமையம்
மவுனம்பார்த்து தாக்குவாய் அங்கென்று கும்பித்தாக்கால்
வண்மையாஞ் சுழுத்தியிலே
கலைதானோக்கும் வளம்பெறவே பூரணத்தைப் பதியக்காட்டும்
கண்மையாஞ் சுவாசமது
கபாலம்பற்றி கைலாய வங்குலத்தை காட்டும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6408. காட்டுமே சூட்சமென்ற
குதிரையாலே கதிரொடுங்கி சடாபோலே கண்பிதுங்கி
நீட்டமுடன் பஞ்சபூதங்கள்
அனைத்தும் நிலையான ஒடுக்கவழி யடங்கநின்று
கூட்டமுடன் பிரிதிவினில்
தேய்வுதங்கி குறிப்புடனே தேய்வினிலே வாய்வுதங்கி
காட்டிவே யாகாஸம்
வப்பில்தங்கி கனமான யோகநிலை நிறுத்தும்பாரே
விளக்கவுரை :
6409. பாரேதான் கண்ணாலே
மணக்கண்ணாலே பாங்குபெற யோகநிலை நடத்துதற்கு
சீரேதான் சித்துமுனி
ரிஷிகள்தாமும் சிறப்புடனே குண்டலியாம் யோகந்தன்னை
நேரேதான் நெடுங்காலங்
கற்பமுண்டு தேற்றமுடன் போகநிலையொடுக்கந் தன்னை
வேரேதான் கருவான
நூல்கள்பார்த்து விட்டகுறை யிருந்ததென்று விட்டிட்டாரே
விளக்கவுரை :
6410. விட்டாரே தேவதா ரிஷிகளெல்லாம் விண்ணாடர் மண்ணாடர் மாண்பர்தாமும்
கெட்டாரே யோகநிலை
சூட்சங்காணார் கேடழிந்து பாடழிந்து விழலாய்ப்போனார்
தொட்டகுறி போலாக வுந்தமக்கு
தோறாமல் ஓதிவைத்தேன் புண்ணியவானே
விட்டகுறை இருந்ததொரு
புண்ணியத்தால் வித்தகனே யுந்தமக்கு வமைக்கலாச்சே
விளக்கவுரை :