போகர் சப்தகாண்டம் 6391 - 6395 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6391 - 6395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6391. பண்ணவே கணபதிக்குப் பூசைசெய்து பாலகனே சோடசத்தில் வைத்துப்போற்றி
உண்ணவே மண்டலந்தான் கொண்டாயானால் வுத்தமனே கழற்சிக்காய் விகிதங்கொள்ள
தண்ணமுடன் தேகமது இறுகிக்காட்டும் தாக்கான வாசியது மேல்நோக்காது
கண்ணபிரான் செய்ததொரு குளிகையப்பா கண்மணியே வுந்தனுக்கு போதித்தேனே

விளக்கவுரை :


6392. போதித்தேன் விலாங்கினுட மாயாகற்பம் பொங்கமுடன் சமுசாரிக்கான கற்பம்
வாதிகளுங் கண்டறிந்து செய்வாரப்பா வையகத்தில் விதியுள்ளான் செய்யுமார்க்கம்
சோதித்து சாத்திரங்கள் கண்டாராய்ந்து சுந்தரனே உந்தனுக்கு ஓதிவைத்தேன்
சாதித்தால் குளிகையென்ற விலாங்குகற்பம் சாங்கமுடன் யோகிகட்கு உறுதியாமே

விளக்கவுரை :

[ads-post]

6393. உறுதியாஞ் சிற்றின்பங்கொண்டபேர்க்கு வுத்தமனே யாக்கைநரம்புடையபேர்க்கும்
நிறுதியெனும் தாதுவிருத்தி யில்லாதார்க்கும் நீடூழி போகமது கொள்வோருக்கும்
குறுதியது யில்லாத தேகத்தோர்க்கும் குணமில்லா மணமில்லா மேனுயோர்க்கும்
அறிவுகுன்றி யிருப்பதொரு மாண்பருக்கும் வழகான குளிகையது பாருபாரே

விளக்கவுரை :


6394. பாரப்பா குளிகையது கொண்டபேர்க்கு பாங்குடனே யேழானை பலமுண்டாகும்
ஆரப்பா குளிகையது செய்யப்போறார் வப்பனே யறிவுடையோர் செய்யும்வேதை
நீரப்பா தனிலிருக்கும் விலாங்குகற்பம் நீதியுள்ள கற்பமது என்னசொல்வேன்
பேரப்பா சிவயோகி செய்யாரப்பா பேரின்ப நிலைநடந்தோர் செய்யார்தானே

விளக்கவுரை :


6395. செய்வார்கள் சிற்றின்ப முடையபேர்கள் ஜெகதலத்தில் கோடியுண்டு லக்கோயில்லை
துய்யதமிழ் பண்டிதங்கள் மெத்தவுண்டு துப்புரவாய்ச் செய்துமல்லோவதிதஞ்செய்வார்
மெய்யான கற்பமதை செய்தபேர்கள் மேதினியில் கலவிக்கு முதன்மையாவார்
பொய்யான கற்பமது கூறவில்லை புண்ணியனே யுந்தனுக்கு புகட்டினேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar